அழகான பற்களுக்கான நவீன சிகிச்சை

06 Apr, 2026 | 04:40 PM
image

திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் பற்கள் எப்போதும் கவர்ச்சியாக இருப்பதை அவதானித்திருப்போம். சிலருக்கு அவர்களுக்கு மட்டும் எப்படி நேர்த்தியாகவும், அழகான பற்களும் பெற்று இருக்கிறார்கள் என்ற ஒரு எண்ணம் ஏற்படும். இது தொடர்பான ரகசியத்தை பற்களுக்கான பிரத்யேக சிகிச்சை நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

பிரபலங்களின் பற்கள் அழகானதாகவும் கவர்ச்சியானதாகவும் இருப்பதற்கு அவர்கள் வெனியர்ஸ் எனும் நவீன பற்கள் தொடர்பான சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இதனை மருத்துவ மொழியில் டென்டல் வெனீர் என குறிப்பிடுகிறார்கள். முன் வரிசை பற்களில் ஏற்படும் சமச்சீரற்ற நிலை - பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஆகியவை முகத் தோற்றத்தை பாதிக்கும். இவர்களுக்கு வெனியர்ஸ் எனும் நவீன சிகிச்சையை மேற்கொண்டால்... பற்களின் தோற்றத்தை மாற்றி அமைப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பேணி பராமரிக்கலாம்.

பொதுவாக இத்தகைய தருணங்களில் அவர்களுடைய பற்கள் மீது செயற்கையான மெல்லிய ஓடு ஒன்றினை தயாரித்து அதனை அப்பல்லின் மீது உறையாக அணிவித்து விடுவார்கள். இதற்கு முன் அந்த பற்களின் மேற்பகுதியில் சிறிதளவு அதன் அளவை குறைத்து, அதன் மீது இத்தகைய செயற்கையான பல் ஓட்டினை பொருத்துவார்கள். இதன் மூலம் அவர்களது தோற்றம் மாற்றம் பெற்று புன்னகை அழகாகும். அவையே வசீகரமானதாகவும் மாற்றி அமைக்கும்.

பொதுவாக பற்களின் மீது படிந்திருக்கும் கறையை அகற்ற முடியவில்லை என்றாலோ அல்லது பற்கள் சிறிதளவு உடைந்திருந்தாலோ அல்லது பற்களின் அளவு சிறிதாக இருந்தாலோ இத்தகைய வெனியர்ஸ் சிகிச்சை பலனளிக்கும்.  மேலும் இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் வாய்வழி சுகாதாரம் குறித்தும்.. கடித்து பசியாற வேண்டிய உணவு முறை குறித்தும்... சில பரிந்துரைகளை வழங்குவர். அதனை ஆயுள் முழுவதும் உறுதியாக பின்பற்றினால் பற்களின் அழகும், ஆரோக்கியமும் மேம்படும்.

வைத்தியர் ரீஜா ரஞ்சித் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளாண்டர் ஃபாசிடிஸ் எனும் கால் வலி...

2026-04-16 15:27:44
news-image

பிரசவகால சிக்கலுக்குரிய நவீன சிகிச்சை

2026-04-15 18:48:07
news-image

நான் இன்வாஸிவ் வென்டிலேசன் எனும் நவீன...

2026-04-14 14:30:52
news-image

கோடைகால வெப்ப நிலையால் மாரடைப்பு பாதிப்பு...

2026-04-13 17:51:35
news-image

ஓஸ்டியோமலாசியா எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-11 15:00:40
news-image

சப்டூரல் ஹெமடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-04-10 13:12:32
news-image

ப்ரூக்ஸிசம் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-04-09 15:41:22
news-image

எலிபன்ட்டயாசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை.

2026-04-08 16:58:37
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஓம்பலிடிஸ் எனும்...

2026-04-07 15:16:47
news-image

அழகான பற்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-06 16:40:00
news-image

நாட்பட்ட மூட்டு வலி பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-04-04 17:31:49
news-image

பார்வை திறனை மேம்படுத்தும் நவீன சிகிச்சை...

2026-04-03 15:46:07