கண்டாந்த நட்சத்திர தோஷத்திற்கான பரிகாரம்?

06 Apr, 2026 | 04:27 PM
image

கண்டாந்த நட்சத்திரம் என குறிப்பிடப்படும் நட்சத்திரத்தின் பாதத்தில் நீங்கள் பிறந்திருந்தால்... இந்த பிறவியில் நீங்கள் விவரிக்க இயலாத துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு நீங்கள் பரிகாரங்கள் செய்தால் மட்டுமே அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.  

அசுவினி- மகம்- மூலம்- ஆகிய நட்சத்திரத்தின் முதல் பாதங்களும், ஆயில்யம்- கேட்டை- ரேவதி - ஆகிய நட்சத்திரத்தில் நான்காம் பாதங்களும் கண்டாந்த நட்சத்திரங்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் உங்களுடைய பிறப்பு நிகழ்ந்திருந்தால் ... உங்களுக்கு இந்த கண்டாந்த நட்சத்திர தோஷம் இருக்கிறது என பொருள். வாழ்க்கை முழுவதும் பெரிய துன்பத்தையும், விவரிக்க இயலாத அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத துயரத்தையும் அனுபவிப்பீர்கள். 

இத்தகைய தருணங்கள் கோச்சாரத்தில் இருந்தாலும்... அதாவது சந்திர பகவான் மேலே குறிப்பிடப்பட்ட நட்சத்திரத்தை கடக்கும் போது.. கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வது, சுப காரியங்களை நிகழ்த்துவது ஆகியவற்றை தவிர்த்திட வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இவை அசுபத் தன்மையை ஏற்படுத்தி கெடு பலன்களை வழங்கும்.

இத்தகைய கண்டாந்த நட்சத்திர தோஷத்தில் பிறந்தவர்கள் ஆயுள் முழுவதும் அருகில் இருக்கும் சுயம்புலிங்கத்திற்கு அதாவது சுயமாக லிங்க உருவமெடுத்து அருள் பாலிக்கும் சிவாலயத்திற்கு சென்று, சந்தனத்தை அரைத்து அல்லது பொடியாகவோ தானமாக வழங்கி வர வேண்டும். உங்களது கையால் தானமாக வழங்கி வர வேண்டும்.‌ உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய அதி தேவதையை வணங்கிட வேண்டும். சந்தனம் கிடைக்கவில்லை அல்லது அது தொடர்பான நடைமுறை சிக்கல் இருந்தால் .. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகு, அரகஜா ஆகிய வாசனாதி திரவியங்களையும் , இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றையும் சிவபெருமானுக்கு வாங்கி தரலாம். இதன் மூலம் உங்களுடைய கண்டாந்த நட்சத்திர தோஷத்தை குறைத்துக் கொள்ளலாம்.  சிவனின் அருளை பெற்று சுப பலன்களை அனுபவிக்கலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28