மத்திய மாகாண தொழில்முயற்சியாளர் விருது விழா, தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் ஆகியோரின் தலைமையில் கண்டி கோல்டன் கிரவுன் (Golden Crown) ஹோட்டலில் நடைபெற்றது.
தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை (NEDA) மற்றும் மாத்தளை மாவட்ட வர்த்தக, தொழில் மற்றும் விவசாய சம்மேளனம் (MDCCIA) ஆகியன இணைந்து இந்த விருது விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
மத்திய மாகாணத்தின் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான வணிகத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முயற்சியாளர்களை கௌரவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டதுடன், இதன்போது சுமார் இருநூறு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உள்ளிட்டவர்களுடன் தொழில்முயற்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM