வேனொன்று பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட மூவர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக போகஹகும்புர பொலிஸார்  தெரிவித்தனர்.

 

நுவரெலியாவிலிருந்து கெப்பட்டிபொல வழியாக அப்புத்தளை இதல்கஸ்ஹின்ன போகஹகும்புர நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா அப்புத்தளை பிரதான வீதியில் போகஹகும்புர வெளியராகம பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

மங்கள வீடு ஒன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் செல்கையிலேயே குறித்த வேன் நேற்று இரவு 11.30 மணியளவில் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் வேன் சாரதி உட்பட மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

 

வேன் சாரதிக்கு தூக்கமயக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

இவ்விபத்தில் காயமடைந்த மூவர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இவ்விபத்து தொடர்பில் போகஹகும்புர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.