டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சி: ஜனாதிபதி தலைமையில் நாளை ‘தேசிய கியூ.ஆர்’ ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

Published By: Digital Desk 1

05 Apr, 2026 | 04:17 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்து, "தேசிய கியூ.ஆர் கொடுக்கல் வாங்கல் ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையை நாணயத்தாள்கள் மற்றும் சில்லறை காசுகளின் பயன்பாடு குறைந்த பொருளாதாரமாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். குறிப்பாக, சிறு வணிகர்கள் எவ்வித மேலதிக செலவுகளுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதை இது உறுதி செய்யும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் வயது வந்தவர்களில் 89சதவீதமானோருக்கு வங்கி வசதிகள் உள்ளன.

CEFTS கட்டமைப்பு ஊடாக ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. 450,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் LankaQR வசதி நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், தற்போதும் சந்தையில் 1.48 டிரில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டில் LankaQR மூலமான மாதாந்த கொடுக்கல் வாங்கல்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. இந்த இடைவெளியைக் குறைப்பதே புதிய திட்டத்தின் இலக்காகும்.

கியூ.ஆர் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு விசேட அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம், வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபா வரையான பெறுமதிமிக்க பரிசில்களும்; வழங்கப்படும்.

இந்தத் திட்டம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும். அத்துடன், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய "சமூகத் தெரிவுச் சுட்டி" மூலம் இதன் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான கொடுப்பனவு முறைமையை நோக்கி இலங்கை எடுத்து வைக்கும் ஒரு பாரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28