மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்றும் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் மாணவி அனிதாவின் வீட்டிற்கு இன்று சென்றுள்ளார். மேலும் அனிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.