மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

போரதீவு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார்.

இவர் இரவு வீடுதிரும்பாததையடுத்து உறவினர்கள் இவரை தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல்  பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.