பார்வை திறனை மேம்படுத்தும் நவீன சிகிச்சை - ஓர்த்தோகெரட்டாலஜி

03 Apr, 2026 | 03:46 PM
image

உலகில் உள்ள மக்கள் தொகைகளில் முப்பது சதவீதத்தினர் கிட்ட பார்வை எனும் பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் என்றும், இவர்களுடைய சதவீதம் எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடும் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு அவர்களின் பார்வைத்திறன் மேம்பாடு அடைவதற்காக தற்போது ஓர்த்தோகெரட்டாலஜி எனும் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை அறிமுகமாகி இருப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மயோபியா எனப்படும் கிட்ட பார்வை தொடர்பான குறைபாடுகளை கொண்டவர்களுக்கு கண்ணாடி - கான்டாக்ட் லென்ஸ் - லேசிக்-  பி ஆர் கே-  எனும் நவீன சிகிச்சைகள் மூலமாக நிவாரணத்தை வழங்க இயலும். மேலும் இத்தகைய  நிவாரண சிகிச்சையின் போது பார்வைத்திறன் மேம்படுவதற்காக ஓர்த்தோகெரட்ராலஜி எனும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இவை பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ்களை பாவிக்கும் முறையை போன்றது. பொதுவாக இத்தகைய கான்டாக்ட் லென்ஸ் நீங்கள் இரவு நேரத்தில் உறங்கும் போது அணிய வேண்டும்.

இவை கார்னியா எனப்படும் விழித்திரையின் முன் பகுதியில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற அமைப்பை சீர்படுத்துகிறது. இதனால் பார்வைத் திறனில் மேம்பாடு கிடைக்கிறது. இதனை நீங்கள் தொடர்ந்து பாவிப்பதன் மூலம் பார்வை திறன் குறைபாடு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய சிகிச்சை முழுமையாக பலனளிக்கும் என்றும், சில பிள்ளைகளுக்கு பார்வைத் திறன் குறைபாடு இருந்தாலும் இருபது வயதிற்குப்பிறகு தான் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உள்ளதால்.. அவர்களுக்கு இரவு நேரத்தில் இத்தகைய பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதன் மூலம் பார்வை திறன் குறைப்பாட்டு மேலும் மோசமடையாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

இத்தகைய தருணத்தில் உங்களுடைய வைத்தியர் பிரத்யேக கருவியை பாவித்து கருவிழியின் மேற்பரப்பு - விழித்திரை-  குவியும் திறன் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து லென்ஸை வடிவமைப்பார்கள்.  இரவு நேரத்தில் மட்டுமே அணிய வேண்டும் என்றும், பகல் நேரத்தில் இதனை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் லேசர் வடிவிலான பார்வைத் திறன் குறித்த சத்திர சிகிச்சையை விரும்பாத குழந்தைகளும் இத்தகைய சிகிச்சை பலனளிக்கும்.

வைத்தியர் அமர் அகர்வால் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23
news-image

மேக்சிலரி சைனசிட்டிஸ் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-04-22 16:18:45