கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில்,
குறித்த விருதை பெறுவதற்காக பாடசாலை மேடைக்கு 37 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளேன் என்றும் விருதை பெற்றதற்காக தான் சந்தோஷமடைவதாகவும் 35 வருட கடற்படை சேவையுடன் வெற்றிகரமான கடற்படையின் 21ஆவது கடற்படை தளபதியாக புகழ் பெற்ற விருந்தினர்கள் முன் உரையாட வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடற்படையில் தன்னுடைய பாதை மிக நீண்டது மற்றுமல்லாது தடைகள் பல நிறைந்தது எனவும் தடைகளை எதிர்கொள்ள பாடசாலை கற்றுக்கொடுத்த விடாமுயற்சி மற்றும் போராடும் குணம் என்பன பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறினார்.
தனது உரையின் இறுதியில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கும் கௌரவத்திற்கும் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM