(மனோகரன் பிரியங்கா)
தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியுள்ளன. இது நாடு முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த முக்கியமான தருணத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது அடுத்தகட்ட கல்வி மற்றும் தொழில்சார் பயணத்திற்கான வழிகளை ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதைக் கருத்திற்கொண்டு, சினெக் வளாகம் தனது 'திறந்த வாரத்தை' (Open Week) அறிமுகப்படுத்தியுள்ளது என சினெக் வளாகத்தின் (CINEC Campus) பிரதித் தலைவர் மற்றும் பிரதி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) முன்னாள் தலைவர் சிரேஷ்டப் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உயர்கல்வித் துறைகள், வேலைவாய்ப்புகள் பற்றி சினெக் வளாகம் (CINEC Campus) வழங்கும் 'திறந்த வாரம் ' (Open Week) பற்றிய தெளிவான ஆலோசனைகளை வழங்கும் விசேட ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (02) மாலபே சினெக் வளாகத்தில் (CINEC Campus) பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைமையில் இடம்பெற்றது. விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்டப் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,

விசேடமாக இந்த ஊடக சந்திப்பிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்குத் தெரியும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்தன.
அந்த பெறுபேறுகளுக்கு அமைய, உயர்கல்வியைத் தொடரத் தயாராக இருக்கும் மாணவக் குழுவினருக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காகவே இந்த ஊடக சந்திப்பை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
இதன்படி, சினெக் (CINEC) வளாகம் எதிர்வரும் சனிக்கிழமை (04) முதல் சனிக்கிழமை (11) வரை 'திறந்த வாரம்' (Open Week) ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
சினெக் வளாகமானது கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் உயர்கல்வித் துறையில் சேவையாற்றி வருகின்றது.
இந்த திறந்த வாரத்தின் ஊடாக மாணவர்கள் தமது எதிர்காலக் கல்வி மற்றும் தொழில்சார் பாதைகளை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்போது, எமது பல்கலைக்கழகத்தின் எட்டு பீடங்களையும் (Faculties) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்தந்த பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் பேராசிரியர்கள் இன்று எம்முடன் இணைந்துள்ளனர்.
கடல்சார் பொறியியல் (Marine Engineering) மற்றும் கப்பல் செலுத்துகை (Navigation) போன்ற துறைகளில் நாங்கள் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்குகின்றோம்.
சினெக் வளாகமானது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. எமது மாணவர்கள் சர்வதேச ரீதியில் உள்ள கப்பல் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சிமுலேட்டர் (Simulator) வசதிகளையும் நாம் கொண்டுள்ளோம். இது மாணவர்களுக்கு ஒரு உண்மையான கப்பலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்குகின்றது.
சினெக் (CINEC) வளாகமானது உலகில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம் எங்களிடம் உள்ள நவீன வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்.
அத்துடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை முடித்த மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். குறிப்பாக, பொறியியல், கணினித் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் மருத்துவ அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
சினெக் (CINEC) பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் எமது விரிவான ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புத் துறையாகும். மாணவர்கள் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்காமல், உலகளாவிய ரீதியில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் அவர்களை நாம் தயார்படுத்துகிறோம்.
எமது அனைத்துப் பாடநெறிகளும் சர்வதேசத் தரக்கட்டுப்பாடுகளுக்கு அமைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தொழில் சந்தையில் தற்போது நிலவும் தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடத்திட்டங்கள் அவ்வப்போது Update செய்யப்படுகின்றன.
எனவே, க.பொ.த உயர்தரப் பரீட்சை முடித்த மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், தங்களுக்குப் பொருத்தமான ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
அதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்க எமது பேராசிரியர்களும் துறைசார் நிபுணர்களும் தயாராக உள்ளனர்.
சினெக் வளாகத்தைப் பொறுத்தவரை, நாங்கள் மாணவர்களுக்கு வெறும் பட்டப்படிப்புகளை மட்டும் வழங்குவதில்லை. மாறாக, அவர்களை ஒரு முழுமையான தொழில் வல்லுநர்களாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
எமது பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகள், குறிப்பாக நூலகம், விளையாட்டு வளாகம் மற்றும் மாணவர் தங்குமிட வசதிகள் என அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன. இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த கல்விச் சூழலை வழங்குகின்றது.
நாங்கள் தேவையற்ற தொகைகளை (Unnecessary amounts) அறவிடுவதில்லை. அதுதான் சினெக் நிறுவனத்தின் கொள்கையாகும்.
அரசாங்கத்தினால் அனுசரணை வழங்கப்படும் பிள்ளைகளுக்காக எங்களிடம் வட்டியற்ற கடன் திட்டங்கள் உள்ளன. நாங்கள் எதற்கும் இல்லை என்று சொல்வதில்லை.
இருப்பினும், எங்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடு உள்ளது, அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை. தரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் என்பதுதான் எங்களுடைய தாரக மந்திரமாகும் .
நாங்கள் அதையே பின்பற்றுகிறோம். எப்படியாவது மாணவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.
எங்களுக்கு திருகோணமலையில் மற்றொரு கிளை உள்ளது. எனவே, இரண்டு இடங்களுக்குமான விரிவாக்கத் திட்டங்கள் எங்களிடம் உள்ளன.
ஏற்கனவே நாங்கள் திருகோணமலையில் மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளோம். எங்களது மிக முக்கியமான பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக அங்கு ஒரு முழுமையான வளாகத்தை அமைக்கப் போகிறோம்.
கடல்சார் பொறியியல் (Marine Engineering) போன்ற படிப்புகளை இன்றும் கூட நாங்கள் அங்கு வழங்கி வருகிறோம். அடுத்ததாக, தெகிவளையில் சினெக் நிறுவனத்தின் அதிநவீன வணிகக் கல்லூரியை (Business School) திறக்கவுள்ளோம்.
அங்கு உலகத் தரம் வாய்ந்த UK MBA படிப்புகளையும், அதிக தேவையுள்ள BSc Management படிப்புகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். பேராசிரியர் லலிதின் வழிகாட்டலில் இந்த வணிகக் கல்லூரி இயங்கவுள்ளது. தெகிவளை ரயில் நிலையத்திற்கு முன்பாகவே இதற்கான கட்டிடத்தை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம்.
இதனால் எவரும் எளிதாக இந்த இடத்திற்கு வந்தடைய முடியும். அங்கு ஒரு அதிநவீன (State-of-the-art) வணிகப் பள்ளியை அமைக்கவுள்ளோம்.
எங்களிடம் இன்னும் பல விரிவாக்க யோசனைகள் உள்ளன. எமது இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது கட்நாயக்கவிற்கோ வேலை தேடிச் செல்வதையோ, அல்லது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக மாறுவதையோ நாங்கள் விரும்பவில்லை.
அவர்கள் முறையான கல்வியுடன் முன்னேற வேண்டும் என்பதே எமது கடமை. அதற்காகவே இவ்வாறான வாய்ப்புகளை வழங்குகிறோம். அத்துடன், எமது கட்டணங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானவை.
உயர்தரப் பரீட்சை முடித்த மாணவர்கள் இந்தத் திறந்த வாரத்தைப் பயன்படுத்தி, நேரடியாக எமது வளாகத்திற்கு வருகை தந்து, இங்குள்ள வசதிகளைப் பார்வையிட முடியும்.
அத்துடன் ஒவ்வொரு பீடத்திலும் உள்ள விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடி உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும். உங்களின் எதிர்காலத்தை வளமாக்க சினெக் எப்போதுமே சிறந்த தெரிவாக இருக்கும்.
எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள திறந்த வாரத்தில், மாணவர்கள் நேரடியாக வருகை தந்து தமக்கு விருப்பமான துறைகள் பற்றி விரிவாகக் கேட்டறிய முடியும். இதன் மூலம் உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க சினெக் வளாகம் என்றும் துணையாக இருக்கும்.
எனவே, இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் எமது பாடநெறிகள் பற்றி மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள எமது 'திறந்த வாரத்தில்' (Open Week) கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் சினெக் வளாகத்தின் (CINEC Campus) பிரதித் தலைவர் மற்றும் பிரதி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) முன்னாள் தலைவர் சிரேஷ்டப் பேராசிரியர் சம்பத் அமரதுங்க , கடல்சார் மற்றும் கப்பற்றுறை பீடத்தின் பீடாதிபதி செட்ரிக், சினெக் வளாகத்தின் தயாரிப்பு மற்றும் கணினி பீடத்தின் (Faculty of IT) பீடாதிபதி சுரஞ்சி நதிஷானி , ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி நிபுணர், தற்போது சினெக் நிறுவனத்தில் முழுநேரமாகப் பணியாற்றும் பேராசிரியர் லலிதானந்த, : கணினித் தொழில்நுட்பப் பீடத்தின் பேராசிரியர் ரவீந்திர பெரேரா, இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அஜித்குமார் , சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், தற்போது சினெக் வளாகத்தில் இணைந்துள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் (முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர்) அட்மிரல் ஜயநாத் கொலம்பகே , கல்விசார் விவகாரங்களுக்கான பணிப்பாளர் (போராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்) பேராசிரியர் நமல் தர்மரத்ன உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கலந்துக்கொண்டனர்.



சினெக் வளாகத் திறந்த வாரம் (OPEN WEEK)
சினேக் வளாகம் மாலபே, உயர்தர (A/L) பெறுபேறுகளின் பின்னர் மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வுத் திட்டமாக "CINEC Campus Open Week" ஐ அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாலபேயில் உள்ள சினெக் வளாக வளாகத்தில் நடைபெற உள்ளது.
எட்டு பீடங்கள் மற்றும் மூன்று துறைகளின் கீழ் 250 இற்கும் மேற்பட்ட படிப்புகள் (சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், உயர்தர டிப்ளோமாக்கள், பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டங்கள் உட்பட) வழங்கப்படுகின்றன.
இந்தத் திறந்த வாரத் திட்டம் உயர்தரப் பரீட்சையின் பின்னரான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவான புரிதலை வழங்கும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM