சிறுவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோலி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்பாக சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோலி, இவ்வாறு தொருவோர கிரிக்கெட்டில் சிறுவர்களுடன் ஈடுபட்டிருந்தார். 

கோலியின் செயற்பாடு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் கோலி சிறுவர்களுடன் இணைந்து விளையாடும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் கோலியும் பல சாதனைகளைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.