எம்மில் சிலருக்கு கால் வலி ஏற்படும் அல்லது காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். அத்துடன் தாங்க முடியாத கீழ்ப் பக்க முதுகு வலியும் இருக்கும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை அதன் ஊடாக துல்லியமாக அவதானித்து சிகிச்சையை முழுமையாக பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இவை மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் காடா ஈக்வினா சிண்ட்ரோம் எனும் பாதிப்பாக இருக்கக்கூடும்.
எம்முடைய இடுப்பு பகுதியில் உள்ள முதுகெலும்பு தண்டு வடப் பகுதியில் உறை பையில் உள்ள நரம்பின் வேர்கள் கடுமையாக அழுத்தத்தை எதிர்கொள்வதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. கடுமையான முதுகு மற்றும் கால் வலியுடன் ஆசனவாய் பகுதியில் உணர்வற்ற நிலையும் இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றும் கட்டுப்பாட்டையும் இழந்து விடுவார்கள்.
இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது என்றும், நாற்பது வயதை கடந்தவர்களுக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதிலும் குறிப்பாக எல் 4 - எல் 5 என குறிப்பிடப்படும் முதுகெலும்பு பகுதியில் ஏற்படுகிறது என்றும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
லம்பார் ஸ்பைனல் ஸ்டினோசிஸ் எனப்படும் முதுகெலும்பு நரம்பு குழாய் சுருக்கமடைவதாலும், நரம்பு பகுதிகளில் தொற்று பாதிப்பு அல்லது கட்டிகள் ஏற்படுவதாலும், ஹெர்னியேட்டட் டிஸ்க் எனப்படும் கீழ் முதுகெலும்பு பகுதியில் உள்ள வட்டு ஃ- இடம்மாறுவதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர்கள் எம் ஆர் ஐ எனும் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அத்துடன் 24 அல்லது 48 மணி தியாலத்திற்குள் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.
வைத்தியர் பாலசுப்பிரமணியன்
தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM