அமெ­ரிக்கா,  ஐரோப்பா மற்றும் சீனா வில் விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்ள கடல் உப்பில்  நுண்­ணிய  பிளாஸ்டிக் துணிக் கைகள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பிளாஸ்டிக் போத்­தல்கள் மற்றும்  நுண் பிளாஸ்டிக் நார்கள் என்­ப­வற்றின் மூலமே கடல் உப்பு பெரு­ம­ளவு மாச­டைந்­துள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்

"பிளாஸ்டிக் தின­சரி பாவனை மூலம் எமது சமூ­கத்தில் ஊடு­ரு­வி­யது மட்­டு­மல்­லாது எமது சுற்­றுச்­சூ­ழலும் ஊடு­ரு­வி­யுள்­ளது. பிளாஸ்டிக்  எமது வளி, நீர், நாம் உண்ணும் கடல் உண­வுகள், அருந்தும் பியர், பயன்­ப­டுத்தும் உப்பு அனைத்தி லும் வியா­பித்­துள்­ளது. பிளாஸ்டிக் அனை த்­திலும் உள்­ளது" உள்­ளது என மின்­னே­ஸோரா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளுடன் கூட்­டி­ணைந்து  மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற பேரா­சி­ரியை மேஸன் தெரி­வித்தார்.

இந்த ஆய்­வா­னது  அமெ­ரிக்க விற்­பனை நிலை­யங்­களில் விற்­பனை செய்­யப்­படும்  உல­க­மெங்­கு­மி­ருந்­தான  10  வகை­யான கடல் உப்­புகள்  உள்­ள­டங்­க­லாக 12  வகை­யான உப்­பு­களில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்த உப்பு வகைகளில் பல  பிளாஸ் டிக் நுண்துணிக்கைகளால் மாசடைந்துள் ளமை தனது ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளதாக தெரிவித்த பேராசிரியை மேஸன்,    இந்த ஆய்வின் பிரகாரம் அமெரிக்கர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் 660 பிளாஸ்டிக் துணிக்கைகளை உள் எடுத்து வருவதாக கருதமுடியும் என்று கூறினார்.

விஞ்ஞானிகள் இதற்கு முன்னர் சீனா வில்  விற்பனையாகும் உப்பு வகைகளில் பிளாஸ்டிக் இருப்பதை  கண்டறிந்திருந் தமை குறிப்பிடத்தக்கது.