யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நிறைவுபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மைலோ தொடர் ஓட்டக் கொண்டாட்ட விழாவில் (ரிலே கார்னிவல்) ஆண்கள் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும் பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயமும் ஒட்டு மொத்த சம்பியன்களாகின.
ஆண்கள் பிரிவில் புனித பெனடிக்ட் கல்லூரி 83 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானதுடன் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் வலல்ல ஏ. ரத்நாயக்க கல்லூரி 60 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில் ஏ. வலல்ல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் 112 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
அஞ்சலோட்டப் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் நிறைவில் வலல்ல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் பெண்கள் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×800மீ அஞ்சலோட்டம் மற்றும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டம் என அனைத்திலும் தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தது.
குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி 66 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் இரத்தினபுரி சுமனா மகளிர் வித்தியாலயம் 42 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
ஆண், பெண் இருபாலாருக்குமான கலப்பு பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் 172 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம் 79 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி 64 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
இவ் வருட தொடர் ஓட்ட விழாவுக்கு மைலோ பூரண அனுசரணை வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM