வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலயத்தின் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி

01 Apr, 2026 | 06:13 PM
image

கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலயத்தின் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) பம்பலப்பிட்டி புனித பீற்டர்ஸ் மைதானத்தில் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய வைத்தியசாலை மருத்துவ அதிகாரி டாக்டர் சுஜனி உமாகாந்தன் வருகை தந்திருந்தார். 

அத்துடன் சைவமங்கையர் கழக முகாமையாளர் செல்வி மாலா சபாரட்ணம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

விருந்தினர்களை அதிபர், ஆசிரியர்கள் அழைத்து வருவதையும் நிகழ்வில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளையும் வெற்றி பெற்ற "சண் பிளவர்" இல்லத்திற்கு பிரதம அதிதி வெற்றிக் கேடயம் வழங்குதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு :- எஸ்.எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right