மத்திய சிரியாவிலுள்ள ஹொம்ஸ் நகரில் இராணுவச் சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்ற அல் ஸக்ரா நகரின் அருகிலுள்ள பிராந்தியமானது ஏற்கனவே பல தடவைகள் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.