பாலைவன மணலை பயன்படுத்தி உயர்தர வீதிகளை அமைக்கும் புதியதொரு தொழில்நுட்பத்தை ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
“ரைசிங் சாண்ட்” எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய, உறுதியான வீதிக் கட்டுமானத்தை அமைத்து, ஒரு புதுமையை ஏற்படுத்தவுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், வீதி அமைப்பதில் இதுவரை இருந்து வந்த சவால்களுக்கும் தீர்வாக இந்த தொழில்நுட்பம் கையாளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளுக்காக ஆற்று மணல், பாறை மணல் வகைகளே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பூமியில் அதிகமான நிலப்பரப்புகளில் காணப்படும் பாலைவன மணலை கட்டுமானத்துக்கு பயன்டுத்துவதில்லை. காரணம், அந்த மணல் துகள்கள் மிக நுணுக்கமாகவும் உருண்டையாகவும் இருப்பதே ஆகும்.
பாலைவன மணல் பொதுவாக சீமெந்துடன் வலுவாக ஒட்டாததால் அது கட்டுமானத்துக்கு உறுதியைத் தராது என்ற காரணத்தினால் அந்த மணலை கட்டுமானத்துறையினர் தவிர்த்துவந்தனர்.
இந்நிலையில், ஹோண்டாவின் பாத்அஹெட் நிறுவனம், இந்த பாலைவன மணல் துகள்களை ஒன்றிணைத்து அவற்றை வலுவான செயற்கை மணலாக மாற்றும் ரைசிங் சாண்ட் என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் நுண்மணல் துகள்களை சீரான மற்றும் கடினமான துகள்களாக மாற்றுகிறது. சாதாரணமான இயற்கை மணலை கொண்டு அமைக்கப்படும் வீதிகளை விட ரைசிங் சாண்ட் மூலம் அமைக்கப்படும் வீதிகள் மூன்று மடங்கு உறுதியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இவ்வாறு அமைக்கப்படும் வீதிகள் 20 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருக்கும். ஆனால், தற்போதைய வீதிகள் சராசரியாக 10 ஆண்டுகாலமே நிலைத்திருக்கின்றன.
பாத்அஹெட் நிறுவனமானது 2028இல் கென்யாவில் கட்டப்படவுள்ள தனது உற்பத்தி ஆலையில் “ரைசிங் சாண்ட்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கட்டுமானப் பணிகளை தொடங்கவும் ஆபிரிக்காவில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு நிலையான உற்பத்திப் பொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பையும் உற்பத்தித் திறனையும் நிறுவவும் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM