(துரைநாயகம் சஞ்சீவன்)
தெட்சன கைலாசம் எனப்படுகின்ற திருகோணமலையில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரப் பெருமானின் பிரம்மோற்சவம் இன்று புதன்கிழமை (1) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சிவபெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்றம் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி உள்வீதி உலா சென்று அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்போது 17.04.2026 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு இரதோற்சவமும் 18.04.2026 சனிக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவமும் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் 20.04.2026 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு தெற்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
மஹோற்சவ காலங்களில் "அபிஷேகம்" காலை 8 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கும் தொடர்ந்து விசேட பூஜைகளும் கொடித்தம்ப வசந்தமண்டப பூசைகளும் நடைபெற்று, உற்சவ மூர்த்தி உள்வீதி வெளிவீதி வலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM