பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

01 Apr, 2026 | 03:10 PM
image

பொதுவாக குழந்தைகள் பிறந்து நான்கு மாதத்திற்குள் அவர்களுடைய தலை நின்று விட வேண்டும் என்றும்.. ஆறு அல்லது ஏழு மாதத்திற்குள் யாருடைய உதவியும் இன்றி உட்கார்ந்து விட வேண்டும் என்றும், ஒன்றரை வருடங்களுக்குள் யாருடைய உதவியும் இல்லாமல் நிற்கவும் நடக்கவும் தொடங்க வேண்டும் என்றும், இதுதான் இயல்பான வளர்ச்சி என்றும் குழந்தைகள் நல வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் இந்த வளர்ச்சி சீராக நடைபெறவில்லை என்றால் அதிலும் உங்களுடைய  பிள்ளையின் இடுப்பு மூட்டு சீராக வளர்ச்சி அடைவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால்.. அக்குழந்தைக்கு மருத்துவ மொழியில் டெவலப்மென்டல் டிஸ்ப்ளாசியா ஆஃப் தி ஹிப் என குறிப்பிடப்படும் இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இதற்கு உரிய தருணத்தில்  சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒன்று அல்லது இருவருக்கு இத்தகைய இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு பாதிப்பு இருப்பதாகவும், இத்தகைய பாதிப்பிற்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இத்தகைய பாதிப்பு சிசு வயிற்றில் இருக்கும் தருணத்திலோ பிறக்கும் தருணத்திலோ அல்லது வளர்ச்சி பருவத்தில் இருக்கும் தருணத்திலோ ஏற்படுகிறது. மரபணு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்

மேலும் இடுப்பு மூட்டு என்பது ஒரு பந்து குழி மூட்டு ஆகும். ஒரு இயல்பான இடுப்பு மூட்டு- தொடை எலும்பின் மேல் முனையில் உள்ள பந்து போன்ற பெரிய இடுப்பு எலும்பின் ஒரு பகுதியாக அந்த குழியில் பொருந்துகிறது. சில பிள்ளைகளுக்கு இத்தகைய மூட்டு பொருந்துதலில் இட பெயர்வு நடைபெற்று பாதிப்பு உண்டாகிறது.

இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் பிள்ளைகள் பிறக்கும் தருணத்திலேயே காணப்பட்டாலும் ,சில பிள்ளைகளுக்கு அக்குழந்தை வளரும் முதல் வருடத்திலும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.‌

மிக அரிதாக கருத்தரிக்கும் பெண்மணியின் வயிற்றுப் பகுதியில் பிரசவ தருணத்தில் பனிக்குட நீர் இயல்பான அளவைவிட குறைவாக இருந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பை பிறக்கும் தருணத்திலேயே வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்தால்.. அவர்களுக்கு ஹார்னஸ் அல்லது பிரேஸ் எனப்படும் பிரத்யேக அங்கியை அணிவித்து இதற்கு நிவாரணம் அளிக்க இயலும். இடுப்பு மூட்டு விலகாமல் இருந்தால் இத்தகைய பாதிப்பு குழந்தை நடக்கத் தொடங்கும் வரை கண்டறிய இயலாது.

அத்தகைய நேரத்தில் அதற்கான சிகிச்சை சிக்கலானதாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும். சில பிள்ளைகளுக்கு பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தும் அதனுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

அதே தருணத்தில் உங்களுடைய பிள்ளைகள் பிறந்து ஆறு மாதத்தில் வாக்கர் எனப்படும் பிரத்யேக நடை வண்டியில் உட்கார வைத்து வளர்த்திட வேண்டாம் என்றும் குழந்தைகளை கடந்த தலைமுறையைச் சார்ந்த எம்முடைய முன்னோர்களை போல் இடுப்பில் தூக்கிக் கொண்டு சோறு ஊட்டும் பணியை மேற்கொள்ளுங்கள் என்றும் வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.‌

வைத்தியர் தனசேகர் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23