வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம்  பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெளுக்குளம் பகுதியில் கடமையில் இருந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி  எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான குழுவினர் குறித்த நபரை சோதனையிட்ட போது உடைமையுடன் மறைத்து வைத்திருந்த கஞ்சாவினை நெளுக்குளத்தில் வைத்து செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.