சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியுடன் கூடிய உத்திர நட்சத்திர நாளன்று சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் இறைவன்- இறைவிக்கு திருமண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் திகதியான நாளை நடைபெறுகிறது. இந்நாளில் முருகன் ஆலயத்தில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்திலும்... சிவாலயங்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்திலும்... பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் திருமண வைபவத்திலும்... பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் பங்கு பற்றுங்கள்.
உங்களுடைய வீட்டில் யாரேனும் திருமணத்திற்காக காத்திருந்தால் ... திருக்கல்யாணம் நடைபெறும் போது அங்குள்ள சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவத்தை நிகழ்த்துவார்கள். இத்தகைய தருணத்தில் நீங்கள் உங்களுடைய செலவில் இரண்டு பூ மாலையை வாங்கிக் கொடுத்தால் , அதை சிவாச்சாரியார் இறைவனின் கழுத்தில் அணிவித்து அதை மீண்டும் உங்களிடம் தருவார். அந்த மாலையை நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரலாம். இந்த செயலை நீங்கள் செய்தால் உங்களுடைய வீட்டில் விரைவில் மங்கள ஓசை கேட்கும்.
திருமணமான தம்பதிகள் பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கு பற்றினால்.. புத்திர பாக்கியம் சித்திக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருப்பவர்களும் இந்த நிகழ்வில் பங்கு பற்றினால்.. இறைவனின் ஆசியுடன் மீண்டும் வாழ்க்கையில் சந்தோஷம் மீட்டெடுக்கப்படும்.
இத்தகைய புனிதம் வாய்ந்த பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்து முருகப் பெருமானையும், சிவ பெருமானையும், ராம பிரானையும் வழிபட்டால் .. உங்களுடைய இல்லற வாழ்க்கை இனிமையாக அமைவதுடன், எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM