இன்றைய சூழலில் இளம் தலைமுறயினராக இருந்தாலும் அல்லது மத்திம வயதினராக இருந்தாலும் வைத்தியர்கள் நாளாந்தம் ஒரு மணி தியாலம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனை தேவையற்ற வீண் விரையம் என்றும், காலம் பொன் போன்றது என்றும் சொல்லி சிலர் தவிர்த்து விடுவதுண்டு. இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இணைந்து ஒரு மணி தியாலம் நடந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை துல்லியமாக விவரித்திருக்கிறார்கள்..
நீங்கள் காலையில் நடக்க தொடங்கி ஒரு நிமிடம் நிறைவடைந்ததும் உங்களுடைய குருதியோட்டம் மேம்படும். நடக்கத் தொடங்கியதும் இதய துடிப்பு சற்று உயரும். ரத்த ஓட்டம் மேம்படுவதால்.. தசைகள் மற்றும் மூளைக்கு ஓக்சிஜன் சத்துகள் அதிகமாக கிடைக்க தொடங்கும்.
தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை நடந்தால்... உங்களுடைய உளவியல் நிலையில் மாற்றம் ஏற்படும். உங்களுடைய உடலில் இருந்து என்டோர்பின் எனும் ஹோர்மோன் வெளியாகும் .இது மன அழுத்தத்தை குறைக்கிறது. பத்து நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக நடந்தால் கார்ட்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை தூண்டும் ஹோர்மோனின் அளவு குறைந்து, மன அழுத்தம் குறைய தொடங்கும்.
நீங்கள் 15 வது நிமிடத்தில் நடைப்பயிற்சியை தொடங்கும் போது உங்களுடைய குருதி சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும். இந்தத் தருணத்தில் உடலில் உள்ள தசைகள் குருதியில் உள்ள சர்க்கரையினை பாவிக்க தொடங்கும். இதனால் ரத்த சக்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்கு வரும்.
நீங்கள் முப்பதாவது நிமிடத்தை நடந்து நிறைவு செய்யும் போது உடலுக்குள் கொழுப்பு கரைவதற்கான பணி தொடங்கும். இந்தத் தருணத்தில் உடலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றலாக மாறுகிறது. இதனால் உடல் எடை குறைய தொடங்குகிறது.
நீங்கள் தொடர்ந்து நடந்து 45 வது நிமிடத்தை நிறைவு செய்யும் போது கவலைகள் குறைய தொடங்கும். மனம் அமைதியாகி, பதட்டம் குறைந்து, தெளிவு பிறக்கும். மனதளவில் சிறிய உற்சாகமும் உண்டாகும்.
அறுபதாவது நிமிடத்தை நிறைவு செய்திருக்கும் தருணத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் டோபமைன் எனும் ஹோர்மோனின் உற்பத்தி தொடங்கும். இது உங்களை நாள் முழுவதும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும்.
எனவே நாளாந்தம் ஒரு மணி தியாலம் வரை நடைபயிற்சியை மேற்கொண்டால் ...உங்களுடைய உடலின் எடையை சீராக பராமரிப்பதுடன் எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் ஸ்ரீ தேவி தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM