ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை !

Published By: Digital Desk 3

31 Mar, 2026 | 05:23 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரியொருவரும் நாள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவில் இணைந்து வந்துள்ளனர்.

இவர்கள், இந்தியாவின் புது டில்லியில் இருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.-281 என்ற விமானம் மூலம் மாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவான் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan உள்ளிட்ட அதிகாரிகள் குழு, கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் மண்டபத்தில் வரவேற்றனர். 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29