திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஷவ திருவிழா

31 Mar, 2026 | 02:20 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலையில் அருளாட்சி புரியும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஷவ திருவிழா செவ்வாய்க்கிழமை (31) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. 

இதன்போது அம்பாள் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் தேரில் ஆரோகணித்து விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட தேரில் கம்பீரமாக வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்தார்.

அம்பாளுடைய தேரின் பின்னே அங்கப்பிரதட்சனை செய்தும் அடியழித்தும் கற்பூரச் சட்டி ஏந்தியும் அடியார்கள் தங்கள் நேர்கடனை நிறைவேற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right