நான்கு சகோதரிகளின் அரங்கபிரவேசம் 

Published By: Vishnu

29 Mar, 2026 | 09:21 PM
image

ஆவுஸ்திரேலியா, மெல்பேன் நடனாவயா நடனப்பள்ளி ஸ்ரீமதி மீனா இளங்குமரனின் மாணவிகளான, செல்விகள் சுவேதா தர்மசீலன், சுருதி தர்மசீலன், சுவாதி தர்மசீலன், சுரபி தர்மசீலன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கப்பிரவேசம் சனிக்கிழமை Tony Sheumack Centre அரங்கில் அவை நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

ஓம் என்ற பிரணவப் பொருளுடன் நடராஜப்பெருமான் கம்பீரமாக வீற்றிருக்க நல்லுர் முருகன் ஆலய முகப்புத் தோற்றம் மேடையை அலங்கரிக்க நான்கு சகோதரிகளும் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்வை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து அரங்கப் பிரவேச நாயகிகளின் தாயார் திருமதி நித்தியலக்க்ஷ்மி தர்மசீலனால் இயற்றப்பட்ட அரங்கார நல்லுரான் என்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இசை ஜாம்பவான் அகிலன் சிவானந்தன் தாயாரின் பாடல் வரிகளுக்கு குருவின் நட்டுவாங்க அமைப்புடன் ஆடப்பட்டது நடனம்.

அடுத்து ”வேலனை காண்யேம் வாரீர் ” என்ற வர்ணமும் தொடர்ந்து வீரமணி ஐயரின் ”செல்லக்கனி வாயால் ”, கண்டநாள் முதலாய் என்ற பாடல்களுக்கு 4 சகோதரிகளும் கவித்துவத்துடன் அரங்கபிரவேசம் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right