(சரண்யா பிரதாப்)
2026 ஆம் ஆண்டுக்கான ‘டயபடசோல் ஹை டீ’ விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள சின்னமன் லைஃப் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
“நீரிழிவு நோயை கடந்த வாழ்வு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வை கல்பே லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதைக் கட்டுப்பாடாக அல்லாமல், ஒரு வலிமையான வாழ்க்கை முறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வு, வாடிக்கையாளர்கள், வைத்திய நிபுணர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடல் அமர்வாக அமைந்தது.
‘டயபடசோல்’ என்பது நீரிழிவு நோயாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஊட்டச்சத்து தயாரிப்பு ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், நாளாந்த உணவு மற்றும் சமூக அனுபவங்களை சுதந்திரமாக அனுபவிக்க உதவுகிறது.
நிகழ்வின் முக்கிய நோக்கங்களில் நீண்டகால வாடிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்துதல், சமநிலையான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உண்மையான வாடிக்கையாளர் அனுபவங்களை சேகரித்தல் ஆகியவை அடங்கும்.
மேலும், “சமநிலை வாழ்க்கை: உணவு, இயக்கம் மற்றும் சுவை” என்ற தலைப்பில் வைத்திய நிபுணர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது. அதில் உணவியல் நிபுணர், உடற்பயிற்சி நிபுணர் மற்றும் ஹோட்டல் சமையல் கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டு, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள், நாளாந்த உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சமையல் முறைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கல்பே ஊட்டச்சத்து வணிகப் பிரிவுத் தலைவர் கிஷான் கனகசபை,
இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது ஒரு முக்கிய பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. எனினும், நீரிழிவு குறித்து சமூகத்தில் பரவலாக உள்ள பார்வையை மாற்ற வேண்டியது அவசியம்.
நீரிழிவு உள்ளவர்களை பொதுவாக “நோயாளி” என குறிப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், அது அவர்களின் வாழ்க்கையை ஒரு நிரந்தர நோயின் அடையாளமாகக் கட்டுப்படுத்துகிறது. உண்மையில், நீரிழிவு இருந்தபோதும் பலர் சுறுசுறுப்பான மற்றும் முழுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால், “நோயைத் தாண்டி வாழ்வு” என்ற புதிய அணுகுமுறை முன்னெடுக்கப்படுகிறது.
நீரிழிவு பரிசோதனை செய்வதில் கூட பலர் தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வு இருந்தாலும், நோயறிதலுக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து போதுமான கவனம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, இன்று நடைபெறும் நிகழ்வு உணவு, மனநலம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
உணவு கட்டுப்பாடு நீரிழிவு முகாமைத்துவத்தில் முக்கியமானதாகும். ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப உணவு முறைகள் மாற்றப்பட வேண்டும். நீரிழிவு இருந்தாலும் சுவையான உணவுகளை அனுபவிக்க முடியும்.
மேலும், மனநலமும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்க மனதளவில் தயாராக இருக்க வேண்டியது அவசியம். இதனுடன், உடற்பயிற்சியும் உடல் நலனை பேண உதவும் முக்கிய அம்சமாகும். ஜிம்மிற்கு செல்வது மட்டுமே அல்லாமல், எளிய நாளாநந்த உடற்பயிற்சிகளும் போதுமானவை.
கல்பே நிறுவனம் தனது 60 ஆண்டுகால சேவையை முன்னிட்டு, “நீரிழிவைக்க கடந்த வாழ்வு” என்ற முயற்சியை முன்னெடுத்து வருகிறது. நீண்டகால வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவர்கள் “நோயாளிகள் அல்ல, கனவுகளுடன் வாழும் மனிதர்கள்” எனத் தெரிவித்தார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM