வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நால்வர் கைது!

Published By: Digital Desk 1

29 Mar, 2026 | 11:16 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த ஒருவரும், கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றும் ஒரு பெண் உட்பட மூன்று சீனப் பிரஜைகளும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை 12.10 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான நுமு-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28