இன்றைய சூழலில் மில்லியன் கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் சில மாத அல்லது சில வருடத்தில் கருத்து வேறுபாடுகளால் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டு, தங்களுக்குள் பிரிவை சுமக்க தொடங்குகிறார்கள்.
இது தொடர்பான புரிதல் இரண்டு பேருக்கும் இருந்தாலும் மாய தடையின் காரணமாக இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரிவு தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும். பரிகாரங்களை மேற்கொண்ட பிறகும் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர தீர்வை நோக்கிய பயணத்தில் தேக்க நிலையே நீடிக்கும். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கணவன் மனைவி இடையே பிரிவு நிகழாமல் இருப்பதற்கு சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
கணவன் -மனைவி என இருவரும் தாம்பத்யம் மேற்கொள்ளும் படுக்கை அறையில் எந்தவித கடவுளர்களின் உருவங்களும் இடம்பெறக் கூடாது. எம்மில் சிலர் காலையில் கண்விழித்த உடன் கடவுளின் திருமுகத்தில் தான் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய படுக்கையறையில் கடவுளர்களின் திருவுருவங்களை இடம்பெறச் செய்கிறார்கள் இது உங்களுக்கு சாதகமான பலன்களை விட அசுப பலன்களையே வழங்கும்.
படுக்கையறை என்பது மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் அறை. அதிலும் இரவு என்பது எம்முடைய ஆரா ஆற்றல் குறைந்திருக்கும் தருணம். மேலும் கடவுளின் திருவுருவப் புகைப்படங்கள் இருந்தால் அங்கிருந்து கிடைக்கும் தெய்வீக அலைகள் கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய உறவை சீர்குலைக்கும்.
இதன் காரணத்தினால் படுக்கையறையில் கடவுளரின் திரு உருவ புகைப்படங்களை இடம் பெறச் செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதே தருணத்தில் உங்களுடைய படுக்கை அறையில் கண்ணாடி பதித்த பீரோ மற்றும் கண்ணாடி பதித்த டிரெஸ்ஸிங் டேபிள் இருந்தாலும்... கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீளும். இந்த கண்ணாடியையும் அதற்குரிய இடத்தில் வைத்திருக்க வேண்டும். அதையும் படுக்கையறையில் இடம்பெறச் செய்தால்... அதிலிருந்து கிடைக்கும் எதிர்வினை- தம்பதிகளின் மனதிற்குள் எதிர்மறை ஆற்றலை பரவச் செய்து அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிடும்.
இதனால் படுக்கையறைக்குள் ஒப்பனை செய்து கொள்வதற்கான கண்ணாடியை இடம்பெறச் செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும். இதனை நீங்கள் செய்த பிறகு கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு மாயமாய் மறைய தொடங்கி... அன்பும், புரிதலும் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM