வெலிகடையில் 2600 போதை மாத்திரைகளுடன் இரு பெண்கள் கைது!

28 Mar, 2026 | 05:25 PM
image

(இணையத்தள செய்தி பிரிவு)

வெலிகடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நுகேகொடை பிராந்திய குற்றப்புலனாய்வு  பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அடையாளம் காணப்படாத 2,600 போதை மாத்திரைகளுடன்  இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) மதியம் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது ஒரு சந்தேக நபரிடமிருந்து 2,000 போதை மாத்திரைகளும், மற்றைய சந்தேக நபரிடமிருந்து 600 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஒபயசேகரபுர மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40