நட்பும் நல்லெண்ணமுமே இந்தியாவின் கொள்கை என உதவி இந்தியத் தூதுவர் கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்ற இந்தியாவின் 76வது குடியரசு தின வைபவத்தில் தெரிவித்தார்.

கண்டி வாவிக் கரையில் அமைந்துள்ள கண்டி உதவி இந்தித் தூதுவராலய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் உதவி இந்தியத்தூதுவர் ராதா வெங்கட்ராமன் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்தபின் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின செய்தியை வாசித்தார்.

அதில் இந்தியா எப்பொழுதும் சர்வதேச நாடுகளுடன் நட்புறவுடன் நடந்து கொள்வதாகவும், அரசியல் விஞ்ஞான புவியியல் சார்ந்த அடிப்படையில் சமாதானம், ஒற்றுமை, போன்ற நல்லெண்ணச் செயற்பாடுகளை முன் எடுப்பதாகவும் இது ஒரு முன் உதாரண விடயம் என்றும் அந்த நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வத்துகாமம் நிருபர்)