வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

Published By: Digital Desk 3

27 Mar, 2026 | 12:55 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய பாரிய அப்டேட் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டுள்ளது.

இதுவரை அண்ட்ரோய்ட் போன்களில் மாத்திரம் இருந்த 'இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி' (Two accounts, one phone) தற்போது ஐபோன் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே தொலைபேசியில் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட விடயங்களுக்காக இரண்டு வெவ்வேறு வட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.

செயலியில் கீழே உள்ள பகுதியில் தற்போது உங்களது 'புரொபைல் படம்' (Profile Picture) தென்படும். அதன் மூலம் எந்தக் கணக்கில் இருக்கிறீர்கள் என்பதை இலகுவாக அறிந்துகொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புகைப்படங்களை மெருகூட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களின் பின்னணியை நொடிப்பொழுதில் மாற்ற முடியும். புகைப்படத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை இலகுவாக அகற்றலாம். அனுப்பும் செய்திகளை இன்னும் அழகாகவும், தகுந்த தொனியிலும் மாற்றித் தர 'Writing Help' அம்சம் உதவுகிறது.

தொலைபேசியின் நினைவகம் நிறைவடைவதைத் தவிர்க்கும் வகையில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு 'சாட்' பகுதிக்குள்ளும் சென்று, பெரிய கோப்புகளை மாத்திரம் தெரிவு செய்து அழிக்க முடியும்.

இதன் மூலம் முக்கியமான உரையாடல்களைப் பாதுகாத்துக்கொண்டு, தேவையற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மாத்திரம் நீக்க முடியும்.

புதிய தொலைபேசி வாங்குபவர்களுக்கு உதவும் வகையில், ஐபோனில் உள்ள வட்ஸ்அப் தகவல்களை அண்ட்ரோய்ட் போனுக்கும் மிக இலகுவாக மாற்றும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் 'ஈமோஜி'களை  தட்டச்சு செய்யும் போது, அதற்குப் பொருத்தமான ஸ்டிக்கர்களை வட்ஸ்அப் தானாகவே பரிந்துரைக்கும். இதன் மூலம் உங்களது உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

இந்த புதிய வசதிகள் தற்போது படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், எதிர்வரும் வாரங்களில் அனைத்துப் பயனர்களுக்கும் இது முழுமையாகக் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03
news-image

ஊகங்களைத் தாண்டி தரவுகளால் வெற்றியை கட்டியெழுப்பும்...

2026-02-05 12:33:10
news-image

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...

2026-01-07 13:43:05
news-image

அவுஸ்திரேலியாவில் இளம் வயதினரின் கணக்குகளை முடக்கும்...

2025-11-20 11:18:06