மட்டக்களப்பு,  திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பின் பல வீதிகள் குப்பை நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் குப்பைகள் அனைத்தையும் வீதியோரம் வீசியுள்ளதால் தற்போது துர்நாற்றம் வீசுகின்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது காலநிலையும் சற்று மாற்றமடைந்துள்ளதால் மழையில்  நனையும் கழிவுகளும்  சுகாதாரத்துக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வினவிய போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தங்களது பூரண ஒத்துழைப்பையும்  வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் இன்று இந்த குப்பைகள் வீதியோரம் கொட்டப்படுவதை  மீண்டும் ஒரு முறை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.