2017 நடப்பு ஆண்டில் அதிக டெஸ்ட் விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­றிய வீரர் என்ற பெரு­மையை நாதன் லயன் பெற்றார். இந்­திய சுழற்­பந்து வீச்­சா­ளர்களான அஷ்வின், ரவீந்­திர ஜடேஜா ஆகி­யோரை அவர் முந்­தினார்.

சிட்­டகொங்கில் நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான 2ஆ-வது டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லியா 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்று, தொடரை 1–-1 என சமன் செய்­தது. 

இந்த டெஸ்ட் போட்­டியில் நாதன் லயன் 13 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். 

அவுஸ்­தி­ரே­லிய சுழற்­பந்து வீச்­சாளர் நாதன் லயன், இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்­கெட்டில் இது­வரை 46 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை நாதன் லயன் பெற்றார்.