வட­கொ­ரி­யாவின்  அணு ஆயுத மற்றும் ஏவு­கணை அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிக்க இரா­ணுவ நட­வ­டிக்­கையை  முன்­னெ­டுப்­பதை  தான் விரும்­ப­வில்லை எனவும் ஆனால் தான் அவ்­வா­றான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்தால் அந்த நாள்   வட கொரி­யா­வுக்கு மிகவும் துன்­ப­க­ர­மான நாளாக அமையும் எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

  வட கொரி­யாவின் ஆறா­வது மற்றும் அதி­சக்தி வாய்ந்த அணு குண்டுப் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து அந்­நாட்டின் மீதான அமெ­ரிக்காவின் இரா­ணுவ பதி­லடி தொடர்பில் நிரா­க­ரிக்க டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

“இரா­ணுவ நட­வ­டிக்­கை­யா­னது நிச்­ச­ய­மாக ஒரு தெரி­வாக அமை­யலாம்.   அது தவிர்க்­கப்­ப­டுமா?  எதுவும் தவிர்க்க முடி­யா­தது அல்ல"   என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

“ நான் இரா­ணுவ வழி­மு­றையில் செல்­லா­தி­ருக்­கவே விரும்­பு­கிறேன்"  எனத் தெரி­வித்த அவர், “நாம் அதனை (இரா­ணுவ நட­வ­டிக்­கையை) வட கொரியா மீது  பயன்­ப­டுத்­தினால், அது வட­ கொ­ரி­யா­வுக்கு மிகவும் துன்­ப­க­ர­மான நாளாக அமையும்"  என அவர் தெரி­வித்தார்.

 வட கொரி­யா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­ுவ­தற்­கான தருணம் இது­வல்ல என டொனால்ட் ட்ரம்ப் வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில்,   அவ­ரது அர­சாங்­கத்தை சேர்ந்த சிே­ரஷ்ட  உறுப்­பி­னர்கள் வட கொரியா தொடர்­பான இரா­ஜ­தந்­திர ரீதி­யான தீர்­வுக்­கான கதவு இன்னும் திறந்­தே­யி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளனர்.

அதேசமயம் சர்­வ­தேச கண்­ட­னங்­க­ளையும்  மீறி அணு­குண்டுப் பரி­சோ­த­னையை மேற்­கொண்­டுள்ள  வட கொரியா  ,ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய தடைகள் மற்றும் அமெ­ரிக்­காவின் அழுத்­தத்­திற்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்கப் போவ­தாக   எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­நி­லையில் சீனா வட கொரி­யா­வுக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபையில் புதிய தடை­களை முன்­னெ­டுக்க இணக்கம் தெரி­வித்­துள்­ளது.