அக்­க­ரப்­பத்­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட டொரிங்டன் தோட்­டத்­திற்கு சொந்­த­மான கல்­ம­துரை பிரிவு 6  ஆம் இலக்க தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் தொடர்­கு­டி­யி­ருப்­பொன் றில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் மழை­யினால்   ஐந்து வீடுகள் வரை தாழி­றங்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்­பங்­களைச் சேர்ந்த 20 பேர் வரையில்  அரு­கி­லுள்ள சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் நேற்­று ­முன்­தினம் மாலை முதல் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தொடர்ந்து பெய்­து­வரும் மழை கார­ண­மாக அங்கு வசிக்கும் 22 குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவ­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.

இக்­கு­டி­யி­ருப்­புக்­களில் உள்ள சுமார் 5ற்கும் மேற்­பட்ட வீடு­களில் பாரி­ய­ளவில் வெடிப்­புக்கள் ஏற்­பட்­டதன் கார­ண­மாக  இவ் ஐந்து குடும்­பங்­களை வெளி­யே­று­மாறு தோட்ட நிர்­வா­கமும், கிராம சேவ­கரும் அறி­வித்­த­தாக இம்மக்கள் தெரி­வித்­தனர்.  வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகரினால் வழங்­கப்­பட்­டுள்­                                                ளன.

1926 ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட இக்­கு­டி­யி­ருப்பு கடந்த காலங்­களில் எவ்­வித புனர்நிர்­மா­ணமும் செய்­யப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­வா­கவும், இதனால் மழைக்­கா­லங்­களில் வீட்­டினுள் கூரை­யி­லி­ருந்தும், பூமி­யி­லி­ருந்தும் மழை நீர் கசிந்து வரு­வ­தா­கவும், மழைநீர் கார­ண­மாக தூக்­க­மின்றி பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை அனு­ப­வித்து வரு­வ­தாகவும் மக்கள்  கவலை தெரி­விக்­கின்­றனர்.

மழைநீர் மற்றும் நீர் கசிவு கார­ண­மாக இக்­கு­டி­யி­ருப்பு தாழ்ந்­துள்­ள­தா­கவும் இத்­தாழ்வு கார­ண­மாக தமது குடி­யி­ருப்­புக்­க­ளுக்கும், உயிர்­க­ளுக்கும், சொத்­துக்­க­ளுக்கும் ஆபத்து எற்­பட்­டுள்­ள­தா­கவும் இக்­கு­டி­யி­ருப்­புக்­களில் வாழ்­ப­வர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இது குறித்து தோட்ட நிர்­வாகத்­தி­டமும் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் தெரி­வித்த போதிலும், இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை எனவும் ஆபத்­தான நிலையில் உள்ள தமது உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் காப்­பாற்ற உத­வு­மாறும் இது குறித்து சம்­பந்­த­ப்பட்ட அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்­ றனர்.

குறித்த பகு­தியில் ஏற்­பட்­டுள்ள தாழி­றக்கம் கார­ண­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் தங்க வைக்­க­பட்­டுள்ள இடத்தில் மின்­சார வச­தியோ, மல­சல கூட வச­தியோ, குடிநீர் வச­தியோ கிடை­யாது என்­பதால் கைக்குழந்­தை­க­ளுடன் உள்ள தாய்மார் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில்  மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். 

ஆகையால் சம்பந்தப்பட்ட அதி காரிகள் முன்வந்து இது தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான தீர் வொன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.