சிகரத் தரணியாம் கம்பளை நகர் காக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன்

25 Mar, 2026 | 01:35 PM
image

 உசிவமயம் 

ஆழிசூழ் லங்காபுரி மாமலைகள்

எழில் கொஞ்சும் சிகரத் தரணியாம் கம்பளை திருநகர் போற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மை

நின் திருத்தாள் போற்றி...! 

முத்தமிழ் உறைவிடமாய் நற்றமிழ் மணம் வீசும் கற்றவர்

நிறை நந்நகரில் நித்தமும்

நல்வரம் நல்கி பக்தர்கள் நலம் காண அருள் செய்

ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

வல்லரசாம் ராவணன் செங்கோல் புரி ரத்தினத் தீவக 

மஹாவலி கங்கை கொண்ட 

கங்க ஸ்ரீ புரம் மேவி அடியார்கள் குறை அகல ஆயிரம் கண்ணுடையாளாய் அருட்காட்சி

அளித்து ரட்ஷிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

கைலாய பதியாம் கைலைநாதன்  திருமேனியில் இடமமர்ந்து பூவுலகின் மேன்மை சீர் செய் உமையவள்  அவனியெங்கும் அருட்பெரும் ஜோதியாய் சுடர்மிகு

முழு நிலவாய் அடியார் அகமதில்

நீக்கமற வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

விசுவாவசு வருஷ பங்குனித் திங்களில் புண்ணிய கங்கை நந்நீர் நிறைகுடமதில்  சக்தித் திருக்கரகமாய் உருவெடுத்து இரு பரிவார கரகத்துடன்  

எந்தன் நகர் காத்து பகை பிணி

களைய நல்லாசி வழங்கும்

ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

பூரணச்சந்திரன் நல்லொளி வீசும் பங்குனி உத்தர நற்தினமதில் சிறார்கள் கும்மி கொட்ட மங்கல வாத்தியம் முழங்க வேதியர்கள் மந்திரம்

விண்ணொலிக்க தேவரும் மூவரும் பூமாரி பொழிய கங்கையிலே மஞ்சள் நந்நீராட்டு மனம் குளிர கம்பளை நகர் வலம் வந்து அடியார்கள் திருவிழிகளில்

அருட் காட்சி மேவும் அன்னையே

ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

பத்துத்தினங்கள் அம்மன் திருக்கோயில் தெய்வீக மணத்துடன் திருவிழா கண்டு

உத்தரமதில் பெருவிழாவாக

நகர் வலம் கண்டு இம்மண் சிறக்க அம்பிகையின் புன்னகை 

கண்டு அடியார்கள் மனமதில் ஆனந்தம் கண்டு  பெருவிழாவின் நிறைவாய்

இனிய மாலை பொழுதினில்

முக்கரகங்கள் குடிவிடுதல் கண்டு அன்னையின்  நல்லாசியுடன் அருட் பிரவாகம்

அவனியோங்க 

ஸ்ரீ முத்துமாரியம்மை நின் திருத்தாள் போற்றி...! 

ஆக்கம்: எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்
செயலாளர் 
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் கம்பளை 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28