"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது"

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 10:15 AM
image

யுத்­தத்தில் உயிர்­நீத்த  மக்­களை நினைவுகூரும்  தூபி அநு­ரா­த­பு­ரத்தில் அமைப்­பதே பொருத்­த­மா­ன­தாகும். வடக்கு கிழக்கு மக்கள் இல­கு­வாக வரு­கை­தரும் வகையில் அமை­ய­வேண்டும் என கரு­து­வ­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

உயிர் நீத்த மக்­களை நினை­வு­கூர மே மாதம் மூன்­றா­வது வாரத்தில் ஒரு தினத்தை  தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோ­சனை தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தனி­நபர் பிரே­ரணை நேரத்தின் போது யுத்­தத்தின் போது உயிர்­நீத்த மக்­களை நினை­வு­கூர்­வ­தற்­கா­ன நினை­வுத்­தூ­பி­யொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூரு­வ­தற்­கான பொதுத் திக­தி­யொன்றை தெரி­வு­செய்தல் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா முன்­வைத்த  பிரே­ர­ணை  மீதான  விவா­தத்தின் போது கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறி­ய­தா­வது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் இந்த பிரே­ர­ணையை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கின்றேன். மூன்று தசாப்­த­கால யுத்­தத்தில் உயிர் நீத்த சகல மக்­க­ளையும் நினைவு கூர வேண்­டி­யது அனை­வ­ரதும் கட­மை­யாகும். 

பாதிக்­கப்­பட்ட மக்கள் இதனை முன்­னெ­டுப்­பது தவ­றான ஒன்­றல்ல. ஆகவே இவ்­வா­றான ஒரு பிரே­ர­ணை­யினை நாம் மறுக்­க­வில்லை. எனினும் ஒரு­ சில கார­ணி­களை நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். குறிப்­பாக மூன்று தசாப்த யுத்­தத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் மக்கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

அவர்­களே அதி­க­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். ஆகவே அவர்கள் அனை­வ­ரதும் உற­வுகள் அவர்­களை நினைவு கூரு­வ­தற்­கான பொருத்­த­மான இடம் ஒன்றை நாம் தெரி­வு­செய்ய வேண்டும். மக்கள் சிரமம் இல்­லாது வரக்­கூ­டிய    வகையில் அமைய வேண்டும். ஆகவே அநு­ரா­த­புரம் இந்த செயற்­பாட்­டிற்கு பொருத்­த­மான பிர­தே­ச­மாக அமையும் என நாம் கருத்­து­கின்றோம். அநு­ரா­த­பு­ரத்தில் நினைவுத் தூபி­யினை அமைத்தால்  பாதிக்­கப்­பட்ட மற்றும் உயிர் நீத்த மக்­களின் உற­வுகள் இல­கு­வாக வரக்­கூ­டி­ய­தாக அமையும். 

மேலும் உயிர் நீத்த மக்­களை நினைவு கூரு­வ­தற்­கான பொருத்­த­மான தினம் ஒன்றை தீர்­மா­னிக்க வேண்டும் என்ற கார­ணியும் முக்­கி­ய­மா­னது. குறிப்­பாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்ய முடியும். வேறு எந்­த­வொரு தினமும் வராத வகையில் ஒரு­நாளை நாம் தீர்­மா­னிக்க முடியும். 

அத்­துடன் இந்த நினைவுத் தூபியை பாது­காக்க வேண்டும். ஆகவே ஏதேனும் பொது அமைப்­பொன்றின் கீழ் இதனை ஒப்­ப­டைக்க முடியும். அரச கட்­டுப்­பாட்டின் கீழ் வரக்­கூ­டிய ஏதேனும் ஒரு அமைப்பின் மூல­மாக இதன் பரா­ம­ரிப்பை முன்­னெ­டுக்க முடியும். ஆகவே இந்த விட­யங்கள் குறித்து நாம் பொது­வாக கலந்­து­ரை­யாடி தீர்­மானம் ஒன்­றிற்கு வர முடியும். எவ்­வா­றி­ருப்­பினும் இந்த முன்­மொ­ழி­வினை  நாம் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இதே­வேளை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­னவின் கருத்­துக்கு நன்றி தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுமாயின் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும்  குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59