மத்திய அதிவேக வீதி சர்வதேச நாடுகளை இணைத்த திட்டம் : பிரதமர்

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 09:53 AM
image

கொழும்பு, -கண்டி அதி­வேக பாதையின் நிர்­மாண பணி­க­ளுக்­கான செலவி­னத்தை 25 பில்­லியன் ரூபாவால் குறைத்­துள்ளோம். மேலும் 2019 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்­கி­யிடம் இருந்து இலங்­கைக்கு நிதி உத­விகள் கிடைக்­க­ப்பெ­றாது.

இதனை உலக வங்கி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே, அதி­வேக  வீதியின்  மூன்றாம்  கட்­டத்­திற்­கான  நிதியை ஜப்பான் மிட்­சு­பிசி வங்­கியில் இருந்து பெற்­றுக்­கொள்வோம். அதற்­கான பேச்சு நடத்­தப்­ப­டு­ வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் மத்­திய அதி­வேக பாதையின் முத­லா­வது கட்­டத்தை சீனா­வுக்கும் இரண்டாம் கட்­டத்தை இலங்கை நிறு­வ­னத்­திற்கும் மூன்றாம் கட்­டத்தை ஐப்பான் நிறு­வ­னத்­துக்கும் வழங்­கி­யுள்ளோம். அதன்­பின்னர் நான்காம் கட்­டத்தை கல­கெ­த­ரவில் இருந்து கண்டி வரை நிர்­மா­ணிக்க  இந்­திய நிறு­வனம் முன்­வந்­துள்­ளது. இதன்­படி இது சர்­வ­தேச நாடு­களை ஒன்­றி­ணைத்த அபி­வி­ருத்தி திட்­ட­மாக மத்­திய அதி­வேக அமையும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிர­தமர் விசேட அறி­விப்பு நேரத்தின் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கொழும்பிலிருந்து -கண்­டிக்கு செல்­வ­தற்கு நீண்ட நேரம் எடுக்­கின்­றது. அதி­க­ள­வி­லான வாகன நெரிசல் ஏற்­ப­டு­கின்­றது. இதன்­படி கொழும்பில் இருந்து கண்­டிக்கு செல்­வ­தற்கு நான்கு மணி­நேரம் செலா­வ­கின்­றது. இது தேசத்­திற்கு பெரும் பாதிப்­பாகும். இதன்­படி கொழும்பு- கண்டி அதி­வேக  நிர்­மாண பணிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இதன்­படி கொழும்பு -கண்டி அதி­வேக பாதையின் நிர்­மாண பணி­களில் முத­லா­வது கட்­டத்தை சீனாவும் இரண்டாம் கட்­டத்தை வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இலங்கை நிறு­வனம் பொறுப்­பேற்­றுள்­ளன மூன்றாம் கட்­டத்தை ஐப்பான் நிறு­வனமும் முன்­னெ­டுக்­க­வுள்­ளது. அத்­துடன் நான்­கா­வது கட்­டத்தை கல­கெ­த­ரவில் இருந்து கண்­டிக்கு கொண்டு செல்­வ­தற்கு இந்­தியா நிறு­வனம் ஒன்று முன்­வந்­துள்­ளது. எனவே இது  சர்­வ­தேச நாடுகள் ஒன்­றி­ணைந்த அதி­வேக பாதை­யாகும்.

மேலும் மத்­திய அதி­வேக பாதையின் மூன்றாம் கட்­டத்தை ஐப்பான் நாட்டின் இரு நிறு­வ­னங்கள் பொறுப்­பேற்­றுள்­ளன. இதன்­படி மூன்றாம் கட்­டத்தை இரு கட்­டங்­க­ளான பிரித்து நிர்­மா­ணிக்­க­வுள்­ளனர். இதனால் வெகு சீக்­கி­ர­மாக நிர்­மாண பணி­களை முடித்து கொள்ள முடியும். இதன்­படி மூன்றாம் கட்­டத்தை புஜிடா, டைசெய் ஆகிய நிறு­வ­னங்­களே பொறுப்­பேற்­றுள்­ளன. 

அத்­துடன் கொழும்பு -கண்டி அதி­வேக பாதையின் நிர்­மாண பணி­க­ளுக்­கான செல­வீ­னத்தை 25 பில்­லியன் ரூபாவால் குறைத்­துள்ளோம். இதன்­படி மத்­திய அதி­வேக பாதையின் நிர்­மாண பணி­களின் மூன்றாம் கட்ட பணி­யா­னது பொத்­து­ஹ­ரவில் இருந்து ஆரம்­பித்து கல­கெ­த­ரவில் நிறை­வ­டை­கின்­றது. இந்த வீதிக்கு உய­ர­மான 14 மேம்­பா­லங்கள் உள்­ள­டங்­கு­கின்­றன. எனினும் 159 பில்­லியன் ரூபா­வுக்கு ஐப்பான் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்ட விலை­ம­னுவை ஜப்பான் மற்றும் இலங்கை அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் 134 பில்­லி­ய­னாக குறைக்க முடிந்­தது.

2019 ஆம் ஆண்டு உலக வங்­கி­யிடம் இருந்து இலங்­கைக்கு நிதி உத­விகள் கிடைக்­க­பெ­றாது. இதனை உலக வங்கி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மத்­திய அதி­வேக பாதையின் மூன்றாம் கட்ட பணி­க­ளுக்கு டோக்­கியோ மிட்­சு­பிசி வங்­கியில் இருந்து கடன் பெறு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இது தொடர்பில் எந்­த­வொரு தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. 

கண்டி நகரின் அபி­வி­ருத்­தியின் ஒரு அங்­க­மா­கவே மத்­திய அதி­வேக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றது. கண்டி நகரில் தொழில்­நுட்ப பூங்கா, கைத்­தொழில் பேட்டை உள்­ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது அதிவேக வீதி உறுதுணையான இருக்கும். எனவே மத்திய அதிவேக நிர்மாண பணிகள் தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அதிவேக பாதை மக்களுக்காகவே நிர்மாணிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு வழங்க வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54