அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 09:44 AM
image

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றைமேற்­கொண்டு  இந்தியா சென்றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் திலக்  மாரப்­பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். 

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது   இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­ கொள்­ள­வுள்ள எட்கா  உடன்­ப­டிக்கை, இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மீனவர் உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படவுள்ளது.

குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள  விட­யங்கள் தொடர்­பா­கவும்  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும்

 செயற்­பாடு குறித்தும்   வெளி­யு­றவு அமைச்சர் திலக் மாரப்­பன இந்திய பிரதமருக்கு விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதாவது புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் எவ்வாறு சென்றுகொண் டிருக்கின்றன தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி திலக்மாரப்பனவிடம் வினவ வுள்ளார்.

அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இந்தியா தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்ற நிலைமையிலேயே இந்தியப் பிரதமர் மோடி இது தொடர்பில் அமைச்சர் திலக்மாரப்பனவிடம் வினவவிருக்கின்றார்.

அதேபோன்று  எட்கா உடன்படிக்கை தொடர்பாகவும் அதில்   உள்ளடக்கப்படவுள்ள  விடயங்கள் குறித்தும் இதன் போது  விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. 

இந்த விஜ­யத்­தின்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் மாரப்­பன இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,   வெளி­யு­றவு செய­லாளர் ஜெய­சங்கர்,  மற்றும்  பல்­வேறு  முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்து இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.  

நாளை 10ஆம் திக­தி­வரை  புது­டில்­லியில் தங்­கி­யி­ருக்கும்  வெளி­வி­வ­கார அமைச்சர் மாரப்­பன  இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான   நட்­பு­றவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பான  கலந்­து­ரை­யா­டல்­களில்   ஈடு­ப­டுவார்.  குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பத­வி­யேற்­றதன் பின்னர் தனது முத­லா­வது வெளி­நாட்டு விஜ­ய­மாக அமைச்சர் மாரப்­பன இந்­தியா சென்­றுள்­ளனர்.  

அவ­ருடன்  வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர்  பிரசாத் காரி­ய­வசம், தெற்­கா­சிய மற்றம் சார்க் பிரி­வுக்­கான வெளி­வி­வ­கார அமைச்சின் பணிப்­பாளர் எம்.ஏ.கே.  கிரி­ஹ­கம  ஆகி­யோரும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ருடன் இந்­தியா சென்­றுள்­ளனர். 

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 70 இற்கு 30 என்ற அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்தள விமான நிலையத்தை இந்தியா ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே வெ ளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனவின் இந்திய விஜயம் அமையவுள்ளதுடன் இந்தியப் பிரதமருடனான சந்திப்பும் இன்று இடம்பெறுகின்றது.

இதேவேளை கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெ ளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் உதவியுடனான திட்டங்கள் இலங்கையில் தாமதமடைந்து வருவதாக விசனம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் திலக்மாரப்பனவின் இந்திய விஜயம் பிராந்திய அரசியலில் ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51