வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’ வசதி !

23 Mar, 2026 | 01:07 PM
image

உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ் அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையை மேலும் மேம்படுத்தும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘After Reading’ எனப்படும் இந்த புதிய வசதியின் மூலம், ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மெசேஜ் திறக்கப்படாமல் இருந்தால், அது 24 மணிநேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த புதிய அப்டேட் குறித்த தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வட்ஸ் அப் செயலியில் ‘Disappearing Messages’ என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த வசதி முழு உரையாடலுக்கே பொருந்தும். பயனர்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் போன்ற கால எல்லைகளைத் தேர்வு செய்து மெசேஜ்களை தானாக மறையச் செய்ய முடியும்.

ஆனால், புதிய ‘After Reading’ அம்சத்தின் மூலம், தனிப்பட்ட மெசேஜ்களை மட்டும் தேர்வு செய்து அனுப்பும் வசதி கிடைக்கவுள்ளது. இதனால் குறுகிய நேரத்திற்கான தனியுரிமை பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பாஸ்வேர்டு, OTP போன்ற நுணுக்கமான தகவல்களை பகிரும் போது இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயனர்கள் கருதுகின்றனர்.

மேலும், வட்ஸ் அப் செயலியில் ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ‘View Once’ வசதியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த புதிய அப்டேட் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03
news-image

ஊகங்களைத் தாண்டி தரவுகளால் வெற்றியை கட்டியெழுப்பும்...

2026-02-05 12:33:10
news-image

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...

2026-01-07 13:43:05
news-image

அவுஸ்திரேலியாவில் இளம் வயதினரின் கணக்குகளை முடக்கும்...

2025-11-20 11:18:06