நீர் கொழும்பு புதிய வீதியில் நேற்று இரவு சிறைச்சாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவரான 36 வயதுடையவர் ஒரு மாதங்களுக்கு முன்னரே திருமணபந்த்தில் இணைந்தவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த சிறைச்சாலை பஸ்ஸானது மகர சிறைச்சாலையிலிருந்து  நீர்கொழும்பு நீதிமன்றிற்கு சென்றுகொண்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஹோட்டலொன்றில் பிரபல சமையல்காரர் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னரே அவருக்கு திருமணமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை, விபத்தை தடுக்க முயலாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை போன்ற குற்றசாட்டின் பேரில் சிறைச்சாலை பஸ் சாரதியை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.