எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய வேலைத்­திட்டம் அவ­சியம்

22 Mar, 2026 | 03:06 PM
image

நாட்டில்  எரி­பொருள், எரி­வாயு  என்­ப­வற்­றுக்கு ஏற்­பட்­டுள்ள  தட்­டுப்­பா­டான  நிலைமை கார­ண­மாக  பொருட்கள், சேவை­களின் விலைகள் அதி­க­ரித்து வரு­வ­துடன்  நாட்டின்  சேவைத்­து­றையும்  பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது.  பொதுப்­போக்­கு­வ­ரத்து உட்­பட  பல்­வேறு  பாதிப்­புக்­களை  நாடு  எதிர்­நோக்கி வரு­கின்­றது.

மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டுள்ள  மோதல் நிலைமை கார­ண­மாக எரி­பொருள், எரி­வாயு விநி­யோ­கத்தில்   தளம்பல் நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  இலங்­கைக்கு எரி­பொ­ருட்­களை  ஏற்றி வர­வி­ருந்த கப்­பல்கள்  தாம­த­ம­டைந்­துள்­ள­மை­யினால் எரி­பொருள் விநி­யோ­கத்தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  எரி­பொருள் விநி­யோ­கத்தை மட்­டுப்­ப­டுத்தும் விதத்தில் கியூ.ஆர். முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்தே   எரி­பொ­ருளை  பெற்­றுக்­கொள்­ள­வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதுவும் குறிப்­பிட்­ட­ள­வான  எரி­பொ­ருளே வழங்­கப்­ப­டு­வ­தனால் மக்கள்  பிர­யா­ணங்­களை குறைத்­துக்­கொள்ளும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எரி­பொ­ரு­ளுக்கு தொடர்ந்தும்  தட்­டுப்­பாட்டு  நிலைமை நீடித்தால்  அது  போக்­கு­வ­ரத்துத்துறையை   பாதிப்­ப­துடன்   எரி­சக்தி நெருக்­க­டியை  நிச்­ச­ய­மாக ஏற்­ப­டுத்தும். மின்­சாரம் தடைப்­படும்  அபாயம்  உரு­வாகும். இவற்­றினால் நாடு   ஸ்தம்­பி­த­ம­டையும் நிலைமைக்  கூட  உரு­வா­கலாம்.

2022ஆம் ஆண்டு  நாட்டில்  பொரு­ளா­தார நெருக்­கடி  ஏற்­பட்ட போது எரி­பொ­ரு­ளுக்கும்  எரி­வா­யு­வுக்கும்  பெரும் தட்­டுப்­பாடு  ஏற்­பட்­டி­ருந்­தது. இவற்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மக்கள் பல நாட்கள் வீதி­களில்   காத்­தி­ருக்­க­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. அன்று  மின்­சார விநி­யோகம் பல மணி­நேரம் துண்­டிக்­கப்­பட்­டது.  போக்­கு­வ­ரத்து  முற்­றாக பாதிக்­கப்­பட்­டது,    தொழில்­துறை  முடக்­கப்­பட்­டது, பாட­சா­லைகள், கல்­வி­நி­று­வ­னங்கள் இயங்­க­வில்லை, இதனால்  நாடு  ஸ்தம்­பித்­தது.

தற்­போது  நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள், மற்றும் எரி­வா­யு­வுக்­கான தட்­டுப்­பாடு கார­ண­மாக  மீண்டும் நாடு  முடங்­கி­வி­டுமோ என்று  அச்சம் கொள்ளும் நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எரி­பொருள், எரி­வாயு நெருக்­கடி நிலை­மை­யினால்  நாடு  2022 ஆம் ஆண்டு ஸ்தம்­பிதம் அடைந்­தி­ருந்­தது. அவ்­வாறு   நாடு ஸ்தம்­பி­த­ம­டைந்­த­மை­யினால் ஏற்­பட்ட பாதிப்­புக்கள் தொடர்பில் பெரும்   அனு­ப­வங்­களை  நாட்டு மக்கள்  பெற்­றி­ருக்­கின்­றனர்.  தற்­போதும்  அத்­த­கைய  அவல நிலை ஏற்­ப­டுமோ என்றே மக்கள் அச்சம் கொண்­டி­ருக்­கின்­றனர்.

 நாட்டில் ஏற்பட்டுள்ள  இத்­த­கைய எரி­சக்தி  நெருக்­க­டி­களை தடுப்­ப­தற்­கான  வழி­வ­கைகள் குறித்து இனி­யா­வது நாம்   ஆரா­ய­வேண்­டி­யது  அவ­சியம் என்­பதை அனை­வரும்  உணர தலைப்­பட வேண்டும்.  சர்­வ­தேச ரீதியில்  தற்­போது ஏற்­பட்­ட­தைப்­போன்று  மோதல் நிலை­மைகள் உரு­வானால் எவ்­வாறு எரி­சக்தி நெருக்­க­டியை தவிர்ப்­பது என்­பது தொடர்பில்  சிந்­திக்க வேண்டும்.

கடந்த வாரம்  யாழ்ப்­பா­ணத்தில்  செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்­தி­யி­ருந்த தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் கடற்­றொழில் துறை அமைச்சர் இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர், எரி­பொருள் நெருக்­கடி தொடர்பில்  கருத்து தெரி­விக்­கையில்,  “இலங்­கையைப் பொறுத்­த­வ­ரைக்கும்  மே மாதம் வரை  தேவை­யான எரி­பொருள்  கையி­ருப்பில்  உள்­ளது. எரி­வா­யுவும் அப்­ப­டித்தான் இருக்­கி­றது. எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில்  எரி­பொ­ருளை களஞ்­சி­யப்­ப­டுத்த  போதி­ய­ளவு  களஞ்­சிய வச­திகள் இல்லை. 38 நாட்­க­ளுக்கு மேல்   களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்க முடி­யா­த­நிலை. காணப்­ப­டு­கின்­றது. கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் நாட்டை  நாச­மாக்­கி­யுள்­ளனர். அவர்­களால்  எரி­பொருள் உள்­ளிட்­ட­வற்றை களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கக்­கூ­டிய  பெரி­ய­ள­வி­லான   களஞ்­சி­ய­சா­லை­க­ளைக்­கூட   அமைக்க முடி­ய­வில்லை. அவர்­களின் தோல்­வியே இன்று நாட்டு மக்­களை  வாட்­டு­கின்­றது”  என்று  தெரி­வித்­தி­ருந்தார்.

உண்­மை­யி­லேயே எரி­சக்தி  நெருக்­க­டிக்கு தீர்வு  காணப்­ப­ட­வேண்­டு­மானால்  போதி­ளவு களஞ்­சி­ய­சா­லைகள்  அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. அதே­போன்றே எரி­பொருள், எரி­வாயு என்­ப­வற்றை கிர­ம­மான முறையில் இறக்­கு­மதி செய்து களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­க­வேண்­டிய  அவ­சி­யமும் உள்­ளது. எரி­பொ­ருளைப் பொறுத்­த­வ­ரையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப  ஒன்­றரை மாதங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய தொகை­யினை சேமித்து வைப்­ப­தற்கே  நாட்டில் வச­தி­யுள்­ளது.

இதே­போன்ற எரி­வா­யுவை    களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்கும்  உரிய வச­திகள்  நாட்டில் இல்லை. 800 மெற்­றிக்தொன் எரி­வா­யுவை களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வச­தி­களே  அர­சாங்­கத்­திடம் உள்­ளது.  இவ்­வாறு போதி­ய­ளவு களஞ்­சிய வச­திகள் இல்­லா­மை­யினால் போதி­ய­ள­வான எரி­பொ­ருளை, அல்­லது  எரி­வா­யு­வை  களஞ்­சி­யப்­ப­டுத்த முடி­யாத நிலைமை நீடிக்­கின்­றது.

தற்­போது அமைச்சர்  சந்­தி­ர­சேகர் கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் இதற்­கான நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வில்லை என்று  குற்றம்  சுமத்­தி­யி­ருக்­கின்றார்.  ஆனால்,  முன்னாள் ஜனா­தி­பதி ரணில்  விக்­கி­ர­ம­சிங்­கவோ தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள  எரி­சக்தி நெருக்­க­டிக்கு  தேசிய மக்கள் அர­சாங்­கத்தின் பிர­தான  பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜே.வி.பி.யே காரணம் என்று    குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி   அண்­மையில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார். கடந்த காலங்­க­ளில் ஜே.வி.பி. ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த முட்­டுக்­கட்­டை­களே இன்­றைய எரி­சக்தி நெருக்­க­டிக்கு  முக்­கிய கார­ண­மாகும். ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான ஜே.வி.பி.யின்­கொள்­கைகள்  நாட்டை  பின்­நோக்கித் தள்­ளியுள்ளன.  எரி­பொருள் சேமிப்பு முறைகள் என்­பது காலங்­கா­ல­மாக பயன்­பாட்டில்   இருந்து வந்­தன. முதலில்  அமெ­ரிக்க  நிறு­வ­னங்­க­ளு­டனும் பின்னர்  எண்ணெய்க்  கூட்­டுத்­தா­ப­னத்­து­டனும் இவற்றை நாம் முன்­னெ­டுத்து வந்தோம். 2003 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை  எண்ணெய் தாங்­கி­களை  இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்க நாம் முயற்சி  செய்தோம்.அன்­று­ அந்தத் திட்டம் நிறை­வே­றி­யி­ருந்தால்  இலங்­கைக்கு இன்று   இத்­த­கைய பெரிய நெருக்­கடி வந்­தி­ருக்­காது. எரி­பொருள் தாரா­ள­மாக கிடைத்­தி­ருக்கும் ஆனால்,அந்த திட்­டத்தை ஜே.வி.பியே எதிர்த்­தது. 2015ஆம் ஆண்­டிலும் இத்­திட்டம்  ஜே.வி.பி.யினரால்  தடுக்­கப்­பட்­டது.  2024ஆம் ஆண்டில் நிறை­வ­டைந்­தி­ருக்க வேண்­டிய  இந்­தி­யா­வுக்கும்   இலங்­கைக்கும் இடை­யி­லான எண்ணெய்க்  குழாய் திட்­டத்­தையும் ஜே.வி.பி.யினரே முடக்­கினர். இந்த திட்டம் செயற்­பாட்டில் இருந்­தி­ருந்தால் தற்­போ­தைய இந்த நெருக்­க­டியின் போது எமக்கு  உத­வு­வதை இந்­தி­யாக   கட­மை­யாகக் கரு­தி­யி­ருக்கும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

உண்­மை­யி­லேயே 2001 ஆம் ஆண்டு  அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சி அமைத்­த­தை­ய­டுத்து  திரு­கோ­ண­மலை எண்ணெய் தாங்­கி­களை  இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைப்­பது தொடர்பிலும் அவற்றை அபி­வி­ருத்தி செய்­வது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.   ஆனால், அந்த முயற்­சிக்கு  அன்­றைய எதி­ர­ணி­யினர் கடும் எதிர்ப்­பினை  வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 2015ஆம் ஆண்டு  நல்­லாட்சி அர­சாங்கக் காலத்­திலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பதவி வகித்த போதும் 2023ஆம் ஆண்டு   ரணில் ஜனா­தி­பதியாக பத­வி­வ­கித்த போதும் இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான  எண்ணெய்க் குழாய் விநி­யோகம் தொடர்பில்  ஆரா­யப்­பட்டு தீர்­மா­னங்கள்  எடுக்­கப்­பட்­டன.  அதுவும்  எதி­ர­ணி­யி­னரின்   எதிர்ப்பு கார­ண­மாக   நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

அத­னைத்தான் தற்­போது  முன்னாள் ஜனா­தி­பதி   ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.   இந்­தி­யா­வுடன் இணைந்து  எரி­சக்தி திட்­டங்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தால் தற்­போ­தைய நெருக்­கடி    நிலைமை உரு­வா­கி­யி­ருக்­காது  என்­பதே ரணிலின் நிலைப்­பா­டாக  உள்­ளது.

எரி­சக்தி நெருக்­கடி எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டா­தி­ருக்­க­வேண்­டு­மானால்  அதற்­கான  வழி­வ­கைகள்  குறித்து இனி­யா­வது ஆராய்ந்து தேசிய  செயற்­றிட்டம் ஒன்று  மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.  எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும்   எரி­சக்தி  கொள்கை என்­பது ஒன்­றா­கவே  இருக்­க­வேண்டும்.

தற்­போ­தைய நிலையில்  எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­பட்ட  உடன் இந்­தி­யா­வி­டமே அர­சாங்கம்  உதவி கோரு­கின்­றது.  இவ்­வாறு உதவி கோரு­வ­தை­விட இந்தியாவுடன் இணைந்து ஏற்கெனவே நடைமுறைப்படுத்த இணங்கிய  எரிசக்தி திட்டங்களை  முன்னெடுத்தால்  பிரச்சினைக்கு இலகுவில் தீர்வைக் காணமுடியம்.

நாட்டில் எரிபொருள், எரிவாயு என்பவற்றை  போதியளவில்  சேமித்து வைக்கக்கூடிய களஞ்சியசாலைகளை அமைப்பதுடன் தொடர்ச்சியான விநியோகத்துக்கான  திட்டமிடலும்  அவசியமாகியுள்ளது. அதற்கான  நடவடிக்கைகளை   இனியாவது  ஆட்சியில் உள்ள அரசாங்கம்  எடுக்கத் தவறினால்  எதிர்காலத்தில்  பாதிப்புக்கள்   அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.

எனவே,  எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது  தேசிய வேலைத்திட்டமொன்றை  முன்னெடுக்க வேண்டும்.  இந்த விடயம் தொடர்பில்  இந்தியாவுடன் கலந்துரையாடி கடந்த காலங்களில் திட்டமிடப்பட்ட  நடவடிக்கைகளை  முன்னெடுப்பது  குறித்து  ஆராய வேண்டும்.  எந்த  அரசாங்கம்  ஆட்சியில் இருந்தாலும் தேசிய கொள்கைகள் மாறாத வகையில்  உறுதியான தீர்மானங்கள்  எடுக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகின்றோம்.

..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39
news-image

இரு துருவ நிலைப்பாட்டினை இல்லாதொழிக்க வழி...

2026-02-08 07:13:22
news-image

மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

2026-02-01 10:00:29
news-image

அரசியல் தீர்வு திட்டவரைவை ஒன்றிணைந்து தயாரிக்க...

2026-01-25 11:17:06