கிரேக்க கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என எதென்ஸில் நேற்று இடம்பெற்ற கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிம்ராசுடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் வலியுறுத்தியுள்ளார்.

“கிரேக்க கடன் விவகாரத்தின் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் நிறைவில் மேலதிக நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படக் கூடாது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் ” என மக்ரோங் தெரிவித்தார்.

குறித்த மாநாட்டில் மக்ரோங்கை  தொடர்ந்து கருத்து தெரிவித்த கிரேக்க பிரதமர் சிப்ராஸ்,

“நிதி உதவிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற மூன்றாம் தரப்பினரிடம் திரும்பாது ஐரோப்பா அதன் உறுப்பு நாடுகளின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும்” என தெரிவித்தார்.