பெண் ஒருவரை காரில் கடத்த முயன்ற இரண்டு ஆண்களை குறித்த பெண் செருப்பால் அடித்து பாடம் புகட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் பாடசாலையொன்றில் தனது பிள்ளையை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து விடுவதை  தாய் ஒருவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் பாடசாலைக்கு வரும் போது அங்கு வாசலில் காருடன் நிற்கும் இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை தினமும் கிண்டல் செய்வதோடு பாலியல் தொல்லையும் கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அந்த பெண் பாடசாலைக்கு வந்த போது இரண்டு இளைஞர்களும் அவர் கையை பிடித்து இழுத்து காரில் கடத்த முயன்றுள்ளனர். இதையடுத்து அப்பெண் கூச்சலிட  அருகிலிருந்த மக்கள் அப்பெண்ணிற்கு உதவுவதற்கு அங்கு ஒன்று திரண்டனர்.

அப்போது கோபமடைந்த பெண் இரண்டு இளைஞர்களையும் செருப்பால் அடித்ததோடு, மாட்டு சாணியையும் இருவர் முகத்திலும் பூசியுள்ளார்.

இதையடுத்து, குறித்த இருவரும் பொலிஸாரிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டனர்.