கடந்த காலங்களில் மட்டக்களப்பில் கடும் வெப்பமும்  வறட்சி நிலவிய நிலையில்  இன்று அதிகாலையில் இருந்து  கடும் மழை  பெய்து வருகின்றது.  

பல பின்தங்கிய பிரதேசங்களில் குடிநீர், விவசாயம் மற்றும் தோட்ட பயிர் செய்கைகள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் தற்போது பெய்துவரும்  மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இருந்த போதிலும் சில பிரதேசங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.