இலங்கை அணியின் அடுத்த தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வா அல்லது ரொஷான் மஹாநாம ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாமென இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனத் ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு நேற்றுடன்  தங்களது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளது.

இந்த இராஜிநாமா கடிதத்தை ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கையளித்த போதிலும் இந்தியத் தொடர்வரை  தாங்கள் பதவியில் நீடிப்போம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினத்துடன்  இந்திய - இலங்கைத் தொடர் நிறைவடைந்துள்ளதால் தேர்வுக்குழுவின் பதவிக்கால காலக்கெடுவும் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில் இம்மாத இறுதியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ளது.

குறித்த தொடருக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் பொறுப்பு யாரிடம் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் வேளையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா, மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோரில் ஒருவர் தெரிவுசெய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.