பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீட மின் மற்றும் மின் பொறியியல் பிரிவு மாணவர்களால் அண்மையில் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராய்ச்சி மற்றும்  புத்தாக்கத்திற்கான தேசிய மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

இம் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மாணவர்களின் கண்டுப்பிடிப்புகள் செயற்பாடுகள் என்பவற்றை பார்வையிட்டார்.

இதன் போது உரையாற்றிய பிரதமர் “ ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புக்கள் நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிரதான இரு காரணிகளாகும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே ஒரு புதுமையான நாடாக நாம் முன்னேறுவோம்” என தெரிவித்தார்.