தம்புள்ளை அனுராதபுர பிரதான வீதியில் புலுகால பகுதியில் கடந்த 6ஆம் திகதி இரவு நடந்த வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ள, புலுகால பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய ஸ்ரீயானி மங்களிகா எனும் ஒரு பிள்ளையின் தாயாவார்.

உயிரிழந்த குறித்த பெண் சகோதரியுடன்  புடவைக்கடை ஒன்றில் தொழில் புரியும் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு செல்வதற்காகவே புலுகால நகர பகுதிக்கு வந்துள்ளார்.

மகளும் மகளுடைய தோழியும் எதிர் பக்கத்தில் பஸ் ஒன்றில் இருந்து இறங்கியதைக் கண்டு அவரை அழைத்து செல்ல பாதையை கடக்க முயற்சித்த போது குறித்த பெண் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு கீழே விழுந்துள்ளனர்.

பிரதான வீதியில் கீழே விழுந்து கிடந்க குறித்த பெண்னை அவரின் தங்கை மற்றும் பாதையின் அருகிலுள்ள கடை உரிமையாளர் இருவரும் சேர்ந்து தூக்கிவிட முயற்சிக்கும் போது திடீரென தம்புள்ளை பகுதியிலிருந்து வேகமாக வந்த ஜீப் வண்டி ஒன்று எல்லோரையும் மோதிவிட்டுச் சென்றுள்ளது. 

முதல் விபத்தில் படுகாயமடைந்த பெண் இரண்டாவது விபத்து நேர்ந்து மூன்று நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த சகோதரியும் கடை உரிமையாளரும் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்