பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், சர்ச்சைக்குரிய முறி விற்பனை தொடர்பில் மத்திய வங்கியிலுள்ள இரகசியத் தகவல்களை, ஏலம் இடம்பெறும் தினத்தில் மிக தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் என ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (சி.ஐ.டி.) முன்பாக அர்ஜுன் அலோசியஸ் நேற்றைய தினமும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆஜராகியிருந்தார்.  

நேற்­றைய விசா­ர­ணை­க­ளின்­போது தொலை­பேசி அழைப்­புக்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் முதற்­கட்ட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் சார்பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் விசாரணையில் முன்­னி­லை­யாகமாட்டேன் என அறி­வித்த நிலையில் தனது நேர­டி­யான நிலைப்­பாட்டை ஆணைக்குழுவிடம் மன்றில் தெரி­விக்கும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று காலை 10.00 மணிக்கு ஆரம்­ப­மா­கிய பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசாரணை பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி கசுன் பலிசேனவின் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு ஆரம்­ப­மா­கி­யது. 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­குகள் அனைத்தும் இதன்­போது மீளாய்­வுக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அத்­தோடு பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பிலும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

பிணை­முறி விவ­கா­ரத்தின் முக்­கிய கால­கட்­ட­மாக 2015 ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­குதி கரு­தப்­ப­டு­கின்­றது. குறித்த காலப்­ப­கு­தியில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட பிணை­முறி தொடர்­பான அனைத்து ஆவ­ணக்­காப்­புக்­களும் அது குறித்­தான விட­யங்­களும் சாட்­சிப்­ப­தி­வு­க­ளுக்­காக மீள்­ப­ரி­சோ­தனை செய்­யப்­பட்­டன.

இதன்­பின்னர் பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் சாட்­சி­ய­ம­ளிக்க வரு­கைத்­தந்த அர்ஜூன் அலோ­சியஸ் சாட்­சி­ய­மளிக்க அனு­ம­திக்­கப்­பட்­ட­போதும் தொடர்­ வி­சா­ர­ணைகள் நடை­பெறும் என்­பதால் முதற்­கட்ட விசார­ணை­களை மட்­டுமே நேற்று ஆணைக்­குழு ஆரம்­பித்­தி­ருந்­தது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்பட்ட விசா­ரணை அணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ் ஜெய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இந்நிலையில், அர்ஜுன் அலோசியஸ்  மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.