புற்­றுநோய் இழை­யங்­களை 10  செக்­கன்­களில் அடை­யாளம் காணும் ஆற்­றலைக் கொண்­டுள்ள கையில் எடுத்துச் செல்­லக்­கூ­டிய  பேனா வடிவ சிறிய உப­க­ர­ண­மொன்றைக் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக  அமெ­ரிக்க டெக்ஸாஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர். 

இதன்­மூலம்    புற்­று­நோயை ஆரம்ப கட்­டத்­தி­லேயே கண்­டு­பி­டித்து உட­ன­டி­யாக அறுவைச் சிகிச்­சையை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மா­வ­தாக  அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மேற்­படி  மஸ்பெக் பேனா தொழில்­நுட்­பத்தின் மூலம் புற்­று­நோயை 96  சத­வீதம்  சரி­யாக அடை­யாளம் காண முடியும்   என அந்த விஞ்­ஞா­னிகள் கூறுகின்றனர்.

முதல் கட்­ட­மாக மேற்­படி பேனா  உப­க­ரணம் புற்­றுநோய் ஏற்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் இழை­யத்­துடன் தொடு­கை­யுறச் செய்­யப்­படும். இதன் போது அந்த உப­க­ரணம் குறிப்­பிட்ட இழை­யத்­திற்குள் நீர் துளி­யொன்றை விடு­விக்கும்.

 இந்நிலையில் அந்த இழை­யத்­தி­லுள்ள இர­சா­யனக் கூறுகள் நீர்த் துளியில் உள்­வாங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பேனா உப­க­ர­ணத்தால் அந்த நீர்த் துளி மீள அகத்­து­றிஞ்­சப்­பட்டு அந்தத் துளி­யி­லுள்ள இர­சா­ய­னங்கள்  பகுப்­பாய்­வுக்­குட்­ப­டுத்­தப்­படும்.

தொடர்ந்து அந்த உப­க­ரணம் குறிப்­பிட்ட  இழை­யத்தில் புற்­றுநோய் பர­வி­யுள்­ள­தா என்­பதை மருத்­து­வர்கள் அடை­யாளம் காணும் வகையில்  புற்­று­நோய்க்­கான இர­சா­ய­னங்­க­ளையும் ஆரோக்­கிய கலங்­க­ளி­லுள்ள இர­சா­ய­னங்­களை வேறு­பி­ரித்துக் காணக் கூடிய வகையில் பெறு­பே­றுகளை காட்­சிப்­ப­டுத்தும்.  

அந்தப் பேனா உபகரணமானது ஒரு செக்கன் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இரசாயனக்கூறுகளை பகுப்பாய்வு செய்யும் ஆற்றலைக்கொண்டுள்ளது.